கப் கேக்

தேதி: June 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (9 votes)

 

மைதா - 125 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
சீனி - 100 கிராம்
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். மைதாவை சலித்து வைக்கவும். சீனியை பொடி செய்து கொள்ளவும். அவனை 170 டிகிரி ஃபாரன்ஹீட்டில் முற்சூடு செய்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பொடி செய்த சீனியை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.
பின்னர் வெனிலா எசன்ஸ் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நல்ல மிருதுவான பதம் வரும் வரை அடிக்கவும்.
கடைசியாக மைதா மாவை சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாக சேரும்படி நன்கு கலந்து கொள்ளவும்.
கப் கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி, கலந்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊற்றவும்.
ட்ரேயை முற்சூடு செய்த அவனில் வைத்து 10 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். சாஃப்ட்டான கப் கேக் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அண்ணாவா செண்பகாவா ??? ;) யாரா இருந்தாலும் கேக் சூப்பர். இருங்க இருங்க... எனக்குன்னு ஒரு அடுப்படியை தரட்டும் முதல்ல... அப்பறம் எல்லாம் செய்துடுறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா