கோதுமை சோறு

தேதி: June 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

முழு கோதுமை - 2 கப்
காய்கறி கலவை - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 + 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 + 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - அரை கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
தக்காளி பியூரி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய்
புதினா, மல்லித் தழை
உப்பு


 

கோதுமையை களைந்து, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி பியூரி மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு புதினா, மல்லித் தழை, உப்பு சேர்த்து, காய்கறி கலவையை சேர்க்கவும். நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு தேங்காய் பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி கோதுமையை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
சுவையான கோதுமை சோறு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hai musi assalamu alikum romba alaga seithu irukeenga kothumai soru super naan seiyanumnu innaitha kurippu paarthathum romba sonthosam enakku kannidipaa seithu paarikeren

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி பரிதா,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கோதுமை சோறு, புதுசா, ஹெல்தியான ஐய்ட்டமா பார்க்கவும் கலர்ஃபுல்லா அழகா இருக்கு! முழு கோதுமை கிடைத்து வாங்கினால் செய்துப்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் முசி!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி சுஸ்ரீ,கிடைக்கும் போது அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.