உருளைக்கிழங்கு க்ராடின்

தேதி: June 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (7 votes)

 

உருளைக்கிழங்கு - 4 பெரியது
பால் - அரை லிட்டர்
ஃப்ரெஷ் க்ரீம் - 3 தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
பூண்டு தூள் (அ) பேஸ்ட் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சீஸ் மற்றும் வேக வைத்த கோழி (அ) இறைச்சி (விரும்பினால்)


 

உருளைக்கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
தோல் சீவிய உருளைக்கிழங்கை படத்தில் உள்ளவாறு மெல்லியதாகவும் இல்லாமல், தடிமனாகவும் இல்லாமல் வட்டமாக வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீமை போட்டு அதனுடன் பால் சேர்க்கவும்.
அதனுடன் மிளகுத் தூள், பூண்டு தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
கொதி வரும்போது வெட்டி வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
பிறகு பாத்திரத்தை மூடி மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வப்போது மூடியை திறந்து கிளறிவிடவும். இல்லையெனில் அடிபிடித்துவிடும்.
கிழங்கு வெந்து, கலவை சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, அவன் ட்ரேயில் ஊற்றி பரப்பிவிடவும். மேலே வெங்காயத்தை நறுக்கி தூவவும். விரும்பினால் இறைச்சி அல்லது கோழி சேர்க்கலாம். வெஜிடேரியன்களாக இருந்தால் நறுக்கிய காரட் சேர்க்கலாம்.
இதை அவனில் வைத்து 180° சூட்டில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
மேலே இப்படி பொன்னிறமாக இருக்கும் போது அவனிலிருந்து எடுக்கவும்.
காரம், எண்ணெய், மசாலா இல்லாத குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு க்ராடின் (Potato Gratin) தயார். விரும்பினால் மேலே க்ரேடட் சீஸ் தூவலாம். இது ஒரு ஃப்ரெஞ்ச் உணவு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிராதேன் நல்லா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் ரஸியா ..கிராடின் பார்க்கவும் அது நீங்கள் செய்ததாக இருக்கும் என்றுதான் நினைத்தேன் நல்லா செய்து இருக்கிறீர்கள் ..நானும் இப்படிதான் செய்வேன் கொத்துகறிப்போட்டு செய்வேன்..

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

Potato Gratin அழகா செய்து காட்டி இருக்கிங்க, படங்கள் அத்தனையும் பளிச்சினு நல்லாருக்கு! வாழ்த்துக்கள் ரசியா!

அன்புடன்
சுஸ்ரீ

வணக்கம் சகோதரி அறுசுவைக்கு புது உறுப்பினர் நான் க்ராடின் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. இதை டிபனாக சாப்பிடலாமா? க்ரீமுக்கு பதில் தயிர் சேர்க்கலாமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நன்றி முசி

Eat healthy

சலாம் ஜுலைஹா நான் தான் இதை செய்திருப்பேன்னு நீங்க நெனச்சதுக்கு ரொம்ப மகிழ்ச்சி,உங்க வீட்லயும் இது எல்லோருக்கும் பிடிக்குமா?நீங்க ஃப்ரான்ஸா?

Eat healthy

நன்றி சுஸ்ரீ,ஈஸியான குறிப்புதான், வீட்டில் இருப்பதை கொண்டு செய்து விடலாம்,செய்து பாருங்க

Eat healthy

வெல்கம் உமா,அருசுவைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்,பாராட்டுக்கு நன்றி இரவு நேரத்தில் சாப்பிடலாம்,குழந்தைகளுக்கு பிடிக்கும்,க்ரீம் இல்லாமல் வெறும் பால் மட்டும் சேருங்கள்

Eat healthy

நன்றி

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

hai rasia unga potato cradin parka nalla irukku suvaiyagavum irukumnu ninaikiren seithu parthuvittu solgiren

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.