பரங்கிப்பிஞ்சு பால் கூட்டு

தேதி: June 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பரங்கிப்பிஞ்சு - ஒன்று
சீனி - 2 தேக்கரண்டி
பால் - 150 மில்லி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
முந்திரி - 6
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

பரங்கி பிஞ்சை தோல் சீவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பரங்கி பிஞ்சை போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் குழைய வேகவிடவும்.
மிக்ஸியில் அரிசி மாவு, முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
காய் நன்கு வெந்ததும் அதில் பாலை ஊற்றி அதனுடன் அரைத்த கலவையை போட்டு உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு சீனியை சேர்த்து கரையும் வரை கிளறவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, மிளகாயை இரண்டாக கிள்ளி போட்டு வறுத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான பரங்கிப்பிஞ்சு பால் கூட்டு தயார்.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்