சிக்கன் வறுவல்

தேதி: June 10, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (11 votes)

 

சிக்கன் - கால் கிலோ
தனி மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
கலர் பவுடர் - 2 சிட்டிகை
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப்
உப்பு - அரை தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
சிக்கனை சுத்தம் செய்து, அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், உப்பு, கலர் பவுடர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பிரட்டிய சிக்கனை ஃப்ரிஜ்ஜில் வைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு, இருப்புறமும் நன்கு வெந்து மொறுமொறுப்பாக வரும் வரை பொரித்தெடுக்கவும்.
சுவையான சிக்கன் வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா சிக்கன் வறுவல் சிம்பிளாவும் சூப்பராவும் இருக்கு சீக்கிரேமே செய்து பார்கிறேன் வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நா ஊருது நிஷா,அப்படியே எடுதுக்குறேன்

Eat healthy

சோ யம்மி அண்ட் கலர்ஃபுல் மை ஃபேவரிட் டிஷ் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்