பஷி சாலட்

தேதி: June 12, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கத்தரிக்காய் (பிஞ்சு) - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - தேவைக்கு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
எலுமிச்சை - தேவைக்கு


 

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பிரட்டி வைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கியவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும்.
அதனுடன் பொரித்து வைத்துள்ள கத்தரிக்காயை எண்ணெயை வடித்துவிட்டு சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டிவிடவும்.
மாலத்தீவு ஸ்பெஷல் பஷி சாலட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு பிடித்திருக்கிறது. எப்போதாவது தக்காளி சேர்க்காமல் இப்படி சாலட் (பொரித்த கத்தரிக்காய் சம்பல்) செய்வதுண்டு. அடுத்த தடவை செய்யும் போது தக்காளி சேர்த்துச் செய்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Yummy salad

Eat healthy

சூப்பர்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது