வறட்டு இருமல் பாடாய் படுத்துகிறது உதவுங்கள்

அன்பு தோழிகளே எனக்கு 3 மாதங்களாக வறட்டு இருமல் இருக்கிறது,இரவு நேரங்களில் என்னால் தூங்க முடியவில்லை,இருமி இருமி தொண்டை மிகவும் வலிக்கிறது,நானும் 3 டாக்டர்களை பார்த்துவிட்டேன்,அவர்கள் குடுக்கும் மருந்துகளை சாப்பிடும் வரை இருமல் மட்டு படுகிறது,மருந்தை நிறுத்திவிட்டால்,திரும்பவும் இருமல் வருகிறது எனக்கு சளி இல்லை,தற்பொழுது எல்லாம் இருமும் பொழுது வேஜினல் லீக்கேஜ் வருகிறது,என்ன செய்வது என்று தெரியவில்லை,யாராவது வீட்டு வைத்தியம் இருந்தால் கூறுங்கள்,1 வாரமாக மிளகு,தேன்,இஞ்சி சாப்பிடுகிறேன்,இருந்தும் பயன் இல்லை,என்ன செய்வது தோழிகளே,நான் அடுத்த மாதம் குடும்ப கட்டுபாடு ஆப்ரேஷன் செய்து கொள்ள போகிறேன்,இருமல் இருந்தால் தையல் பிரிந்துவிடும் வாய்ப்பு உள்ளது,யாராவது உதவுங்கள் தோழிகளே

அன்புத் தோழி மஞ்சு
இது என் பாட்டி எனக்கு சொல்லி தந்த வைத்தியம்.
தேவையானவை
கானம் பயறு (கொள்ளு) - 50 கிராம்
நல்ல மிளகு- 3 தேக்கரண்டி
வெள்ளைப் புண்டு - 8 பல்
சுக்கு - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கொள்ளுவை வாணலியில் போடடு சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும்
பின் வறுத்த கொள்ளுவை அம்மியில் (மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும்
இதனுடன் நல்ல மிளகு, புண்டு மற்றும் சுக்கு இவற்றையும் பொடி செய்து கொள்ளவும்
பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை அதில் போடடு தேவையான அளவு தண்ணீர் (2 டம்ளர்) சேர்த்து
தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

பின் இம்மருந்தை சற்று சுடாக குடிக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் காணாமல் போய்விடும். செய்து பாருங்கள்

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

தேன் உடன் மிளகு powder mix சேர்த்து சாப்பிடவும்...

ரொம்ப நன்றி பூர்ணிமா,பிரேமா
பூரணி நீங்க சொன்னதை செய்து பார்க்கிறேன்பா,பூரணி நீங்க சொன்ன மருந்தை 1 நாளைக்கு எத்தனை முறை குடிக்கணும்,அந்த தண்ணிரை எத்தனை நாட்களுக்கு உபயோகிக்கலாம்??மீதம் இருக்கும் தன்ணீரை திரும்ப திரும்ப சூடாக்கி குடிக்கலாமா??

பிரேமா,உங்க பதிலுக்கு ரொம்ப நன்றிபா

Irumalukku Easy solution
Ithu heat nala than varum so weekly once Oil bath must

1.Periya karkandu, vaiyila daily day& night adakina irumal adangum

2.Neiyum , jeeniyum mix panni thondaila padura mathiri sapta sari agum.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹாய் சுபி,
உங்க குறிப்புகள் நல்லா இருக்கு நான் டிரை பண்ணி பார்க்குறேன்

ஹாய் மஞ்சு
நான் சொன்ன குறிப்பில் அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது. தண்ணீரை ஓரளவு சுண்டக் காய்ச்சினால் குழம்பு போல் இருக்கும். அதை ஒரு நாளைக்கு இருவேளை குடித்தால் போதும்.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

this is very useful

மேலும் சில பதிவுகள்