சிங்கப்பூர் சிக்கன் வறுவல்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கோழி - ஒன்று
உலர்ந்த மிளகாய் - 10
பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
தயிர் - அரை கப்
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - அரை கப்
மைதா - கால் கப்
எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து சற்றுப் பெரிய துண்டங்களாகப் போட்டுக் கொள்ளவும்.
இரண்டு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, கோழித் துண்டங்கள் மீது தடவி சிறிது நேரம் ஊறவிடவும்.
இஞ்சி, பூண்டினை கழுவித் தோலுரித்துக் கொள்ளவும். கறிவேப்பிலை இலையினை கழுவிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, அரிசி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து மீதமுள்ள எலுமிச்சை சாறு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாவினை தயிருடன் சேர்த்து மிருதுவான விழுதாக வரும் வரை நன்கு கலக்கிக் கொள்ளவும்.
கோழித்துண்டங்களின் மேல்புறம் ஒரு கத்தி கொண்டு ஆங்காங்கு ஒரு சில வெட்டுகள் உண்டாக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவினை இத்துண்டங்களின் மீது நன்கு தடவி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 6 மணி நேரம் நன்கு ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள கோழித்துண்டங்களை எடுத்து மைதா மாவில் பிரட்டி, அதிகப்படியான மைதாவினை உதறிவிட்டு எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த துண்டங்களை எண்ணெய் உரிஞ்சும் காகிதத்தில் போட்டு எண்ணெய் வடிந்தவுடன், கொத்தமல்லித் தழையினை பொடியாக நறுக்கி இதன்மீது தூவிப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்