மைக்ரோவேவ் காரட் அல்வா

தேதி: October 21, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

காரட் துருவல்- 2 கப்
சீனி- 3 டேபிள்ஸ்பூன்
பால் பவுடர்- 5 டேபிள்ஸ்பூன்
நெய்- 1 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி- 1 ஸ்பூன்


 

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் காரட் துருவலையும் நெய்யையும் கலந்து 4 நிமிடம் HIGH-ல் சமைக்கவும். காரட் நன்கு மசிந்திருக்கும். இப்போது பால் பவுடர், சீனி, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து மறுபடியும் 2 நிமிடங்கள் சமைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

காரட் அல்வா செய்து பார்த்தேன். மிகவும் எளிதாக விரைவில் செய்ய முடிந்தது. இது போல மைக்ரோவேவில் செய்யக்கூடிய ஸ்வீட்ஸ் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.

god is my sheperd

காரட் அல்வா செய்து பார்த்ததற்கும் அது நன்கு வந்ததற்கும் மகிழ்ச்சி. உங்களுக்காக மறுபடியும் மைக்ரோவேவ் பால்கோவா செய்முறையை இன்று எழுதியிருக்கிறேன். செய்து பார்த்து எழுதுங்கள்

If i didn't have milk powder means. what can i do? Instead of milk powder, i can add milk , is it ok?

"Patience is the most beautiful prayer !!!"

பால் பவுடரிலுள்ள அடர்த்தி-texture மைக்ரோவேவ்
முறைப்படி காரட் அல்வா செய்யும்போது அது கெட்டியாக உதவுகிறது. வேண்டுமானால் பாலை மிக கெட்டியாக சுண்ட வைத்து முயற்சி செய்து பார்க்கலாம்.

Thanks to clear my doubts.

"Patience is the most beautiful prayer !!!"

செய்ய சுலபமாகவும் ருசியில் அருமையாகவும் அதிக சர்க்கரை இல்லாமலும் இருந்தது. அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த எளிய முறை குறிப்பை அளித்ததற்க்கு மிக்க நன்றி!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்புள்ள லக்ஷ்மி!

காரட் அனைவருக்கும் பிடிக்கிற மாதிரி நன்றாக வந்ததென நீங்கள் அன்புடன் கொடுத்த பின்னூட்டம் மகிழ்வைத்தந்தது. என் அன்பான நன்றி!!

அன்பு மனோ அக்கா

காரட் அல்வா செய்து பார்த்தேன். நன்றாக வந்தது என் குழந்தைக்கு மிகவும் பிடித்து விட்டது . மிக்க நன்றி.

என்றும் அன்புடன்.
மைதிலி.

Mb

அன்புள்ள மைதிலி!

காரட் அல்வா, பூண்டு வெங்காயத் துவையல் இரண்டையும் செய்து பார்த்து நன்றாக வந்தது என அன்பான பின்னூட்டம் தந்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி!!