லெமன் போஹா

தேதி: June 15, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

எலுமிச்சை பழம் - ஒன்று
கெட்டி அவல் - ஒரு கப்
கொத்தமல்லித் தழை - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
ஆல் பர்பஸ் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் - தலா ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2 (அ) காரத்திற்கேற்ப
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு


 

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவலை உடையாமல் கழுவி, நீரை நன்கு வடித்துவிட்டு மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்று சேரும்படி நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பின் அவல் நன்கு மலர்ந்து இருக்கும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் கலந்து வைத்துள்ள அவல் சேர்த்து சிறு தீயில் கிளறவும்.
பின்னர் கொத்தமல்லித் தழை, ஆல் பர்பஸ் பொடி சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான லெமன் போஹா தயார்.

ஆல் பர்பஸ் பொடிக்கு இங்கே சொடுக்கவும் : <a href="/tamil/node/15911"> ஆல் பர்பஸ் பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுபர்ப்

‍- இமா க்றிஸ்

சூப்பர். நான் சில நாள் முன் பெங்களூரில் இவர் நண்பர் வீட்டில் சாப்பிட்டேன். மிகவும் பிடித்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இமா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனி,
செய்து பாருங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா