பனீர் மசாலா

தேதி: June 18, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

 

பனீர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 5
தக்காளி - 4
குடை மிளகாய் - ஒன்று
சன்னா மசாலா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
பட்டை - 4 துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்


 

தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். 3 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2 முழு வெங்காயத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வேகவைத்த வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீரை போட்டு பொரித்து எடுக்கவும். அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கால் தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கிவிட்டு மூடி வைக்கவும்.
பிறகு 2 நிமிடங்கள் கழித்து திறந்து வதக்கி, குடை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
சன்னா மசாலா தூள் போட்டு வதக்கி ஒரு தேக்கரண்டி வினிகர், சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு போட்டு நன்கு கிளறிவிடவும்.
அதனுடன் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும்.வெங்காயம் வேகவைத்த தண்ணீரை ஊற்றி, ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள் போட்டு கிளறி மூடிவிடவும்.
2 நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிட்டு, மேலும் 4 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு, பொரித்து வைத்துள்ள பனீரை போட்டு கிளறி 3 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சுவையான பனீர் மசாலா தயார்.
இந்தக் குறிப்பினை வழங்கி இதனை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சத்தியா அவர்கள். புதுவகை சமையலில் மிகுந்த திறன் வாய்ந்தவர். பல சமையல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமாக முழு வெங்காயத்தை வேக வைத்து சேர்த்து செய்து இருக்கிறீர்கள்.. முயற்சித்துப் பார்க்கிறேன்.. :)