பூண்டு மிளகாய் சட்னி

தேதி: June 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (15 votes)

 

காய்ந்த மிளகாய் - 15
பூண்டு - 5 பல்
தக்காளி பேஸ்ட் - 2 தே.கரண்டி
உப்பு - சிறிது


 

காய்ந்த மிளகாய்,பூண்டு,தக்காளி பேஸ்ட்,உப்பு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு முதலில் அரைக்கவும்.
அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.
சுவை பார்த்து உப்பு போதவில்லையெனில் கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்.
தக்காளி பேஸ்ட் சேர்ப்பது கலர் மற்றும் புளிப்பு சுவை தரும்,புளிப்பு இன்னும் தேவையெனில் கொஞ்சம் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.
இது தோசை,இட்லிக்கு நல்ல சட்னி.


மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும்..நானும் இப்படித்தான் செய்வேன்.. சீக்கிரமா செய்யக்கூடிய சட்னி... சுவையாகவும் இருக்கும்..வாழ்த்துக்கள்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

வ அலைகும் சலாம்,ஆமாம் விரைவில் செய்யகூடியதுதான்,சுவையும் நல்லா இருக்கும்,பதிவுக்கு நன்றி தோழி

Eat healthy

சிம்பிள் சட்னி சூப்பர் ஆனா பூண்டு பச்சைவாசம் வரதா?

நன்றி நஸ்ரின்,கொஞ்சம் தானே பூண்டு சேர்கிறோம்,பச்சை வாசனை வராது.

Eat healthy

romba kaarama irundhuchu..... but very tasty