வாழை மசாலா ரோஸ்ட்

தேதி: June 20, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

வாழைக்காய் - ஒன்று
வெங்காயம் - பாதி
பூண்டு - 5 பல்
இஞ்சி - பாதி விரல் அளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய், கடுகு, சீரகம், சோம்பு - தாளிக்க


 

வாழைக்காயை முக்கால் பதத்தில் வேகவைத்து, தோல் நீக்கி சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் தாராளமாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம், சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வாழைக்காய், தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி நீர் தெளித்து வேகவிடவும்.
நன்கு வெந்ததும், மேலும் சிறிது எண்ணெய்/குக்கிங் ஸ்ப்ரே விட்டு, சிறு தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான வாழைக்காய் மசாலா ரோஸ்ட் ரெடி.

கரம் மசாலா பொடிக்கு இங்கே சொடுக்கவும் : <a href="/tamil/node/25684"> கரம் மசாலா பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hi uk5mca, பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு... புதுசு புதுசா ட்ரை பண்றீங்க.. வாழ்த்துக்கள்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

கலர்ஃபுல். வாழ்த்துக்கள்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஹாய் கவி நல்லா இருக்கீங்களா பேசி நாளாச்சு வாழக்காய் மசாலா ரோஸ்ட் சூப்பர்ரா இருக்கு கவி வாழ்த்துக்கள்

ஹாய் கவி நல்லா இருக்கீங்களா பேசி நாளாச்சு வாழக்காய் மசாலா ரோஸ்ட் சூப்பர்ரா இருக்கு கவி வாழ்த்துக்கள்

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷபி,
ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உமா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நஸ்ரின்,
நலம்.நீங்க நலமா?
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Colorfula irku.nanri

Kalam pon ponrathu

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா