இக்கான் பக்கார்-2

தேதி: June 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

பாறை மீன் அல்லது வவ்வா மீன் - 5 (medium size)
வெண்ணெய் அல்லது எண்ணெய்- சிறிதளவு

மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம்- 10
பூண்டு- 10 பல்
இஞ்சி- 2இன்ச் துண்டு
லெங்குவாஸ் (சித்தரத்தை)- 3 இன்ச் துண்டு
கேண்டில் நட் அல்லது முந்திரி பருப்பு- 5
ஃப்ரெஷ் மஞ்சள்- 1இஞ்ச் துண்டு (அல்லது மஞ்சள் தூள்)
சர்க்கரை(சீனி)- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

டிப்பிங் சாஸ் செய்ய:

பச்சை தக்காளி (தக்காளி காய்)- 2
பழுத்த மிளகாய்- 10
பச்சை மிளகாய்- 10
சின்ன வெங்காயம்- 5
பூண்டு- 5பல்
சர்க்கரை(சீனி)- 1/2தேக்கரண்டி
ஸ்வீட் சோயா சாஸ்- 1மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு


 

மீனின் வயிற்றுப்பகுதி மற்றும் தலையில் உள்ள கழிவுகளை நீக்கி
சுத்தமாக்கவும் (தலையை தனியே வெட்ட வேண்டாம். முழு மீனாக இருக்க வேண்டும்)

சுத்தம் செய்த மீனை பட்டர் ஃப்ளை கட் செய்யவும். அல்லது கத்தியால் மூன்று அல்லது நான்கு கீறல்கள் இரு புறமும் போடவும்.

அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து மசாலாவை மீனில் நன்றாக பிரட்டி ஃப்ரிட்ஜில் குறைந்தது 2மணிநேரம் ஊறவிடவும். (இரவு பார்பிக்யூ செய்வதாக இருந்தால் காலையிலேயே மசாலா பிரட்டி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் மீன் மசாலாவில் நன்றாக ஊறியிருக்கும்)

பார்பிக்யூ க்ரில்லில் மீனை இருபுறமும் நன்றாக சுட்டெடுக்கவும். பார்பிக்யூவில் சுடும் போது லேசாக வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவவும்.

டிப்பிங் சாஸ் செய்ய:

தக்காளி காய், பச்சை மிளகாய், பழுத்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும் அணைத்து ஆறியதும் சர்க்கரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் ஸ்வீட் சோயா சாஸ் சேர்த்து கலந்தால் டிப்பிங் சாஸ் தயார்.

பார்பிக்யூ செய்த மீனை டிப்பிங் சாசுடன் பரிமாறவும்.


மீனில் காரம் இருக்காது. டிப்பிங் சாஸ் காரமாக இருப்பதால் இதில் மீனை தொட்டு சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இக்கான் பக்கார் பேரே வித்தியாசமா இருக்கு படிக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள்

குறிப்பு சூப்பர்,.... ஆனா படத்தை போட்டா தான் ரொம்ப சூப்பர்ன்னு சொல்வேன் :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super pa nan edha othukiran .................,vanitha saptacha pa

நன்றி வனி. ஃபோட்டோ... அடுத்தவாட்டி செய்யும் போது அனுப்பறேன். அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த குறிப்பை அப்படியே "FTC Forum" - ல் போட்டிருக்கிறார்கள். இங்கு சொல்வது தவறோ? தெரியவில்லையே. தவறெனில் சொல்லவும். எடுத்துவிடுகிறேன்.

அன்புடன்
ஜெயா.

நன்றி நஸ்ரின்! இக்கான் பக்கார் அப்படீன்னா இந்தோனேஷிய பொழியில் சுட்ட மீன் னு அர்த்தம் :), செய்து பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!