தக்காளிக்காய் கூட்டு

தேதி: June 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (6 votes)

 

வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப்
தக்காளிக் காய் - 5
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 2
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் - தலா ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுந்து, சீரகம், எண்ணெய், காய்ந்த மிளகாய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு


 

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிக் காய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, வேக வைத்த பாசிப்பருப்புடன் வதக்கியவற்றை சேர்த்து வேகவிடவும்.
தேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து அரைத்து, பருப்புக் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான தக்காளிக்காய் கூட்டு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி இன்றுதான் தக்காளிகாய் கூட்டு செய்தா எப்படி இருக்கும் என்று நினைத்து கொண்டிருதேன் உங்க குறிப்பு வந்துருச்சு சந்தோசம் கவி

என்னுடைய குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

நஸ்ரின் ,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Thakkali kai koottu seidhu parthen. romba nalla irundhadhu. Kaikari Kadai-yil idhuvarai thakkali kai parthuttu idhil enna seyya mudiyum-nu theriyadhadhaal vaangiyadhu illai. unga kurippai parthuttu thaan try pannen. nalla irundhadhu. Kurippirku Nanri