பிட்சா

தேதி: June 26, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (9 votes)

வெங்காயம் - ஒன்று
குடை மிளகாய் - கால் கப்
ப்ளாக் + க்ரீன் ஆலிவ் காய் - 10
துருவிய சீஸ் - 150 கிராம்
டூனா மீன் - ஒரு டின்
மாவு தயாரிக்க:
மைதா மாவு - 4 கப்
பால் - கால் கப்
ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சாஸ் செய்ய:
தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - அரை கப்
சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி

வெங்காயம், குடை மிளகாய் மற்றும் ஆலிவ் காயை நறுக்கிக் கொள்ளவும். அரை கப் தண்ணீரில் ஈஸ்ட்டை கலந்து வைக்கவும். சாஸ் செய்ய கொடுத்தவற்றை கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பால், சீனி, ஆலிவ் ஆயில், உப்பு, கரைத்து வைத்துள்ள ஈஸ்ட் சேர்த்து நன்றாக பிசைந்து காற்று புகாமல் மூடி வைக்கவும். 2 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு இரு மடங்காகி இருக்கும்.
மாவினை சற்று பெரிய சப்பாத்தி போல போட்டு, 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 5 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
வேக வைத்த சப்பாத்தியின் மேல் 2 மேசைக்கரண்டி அளவு சாஸ் ஊற்றி, 2 மேசைக்கரண்டி டூனா மீன் தூவி, அதன் மேல் வெங்காயம், குடை மிளகாய், ஆலிவ் காயை பரவலாக வைக்கவும்.
கடைசியாக சீஸ் தூவி, மீண்டும் அவனில் வைத்து 8 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
சூடான, சுவையான பிட்சா ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

கலக்குறீங்க.. போங்க...!! சூப்பரா இருக்கு..!!

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

சூப்பர்... ஈசி பீட்சா....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பரா ஈசியா இருக்கு முசி.
ஓவன் இல்லையேன்னு இப்பதான் வருத்தமா இருக்கு. ஓவன் எந்த பிராண்டு வாங்கலாம்ன்னு சொல்லுங்க முசி

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

Colourful.. peza..nice

Kalam pon ponrathu

வாவ் சூப்பர் முசி இதே போல் பக்கத்துக்கு வீட்டு பாபி செய்வாங்க சூப்பர்ரா இருக்கும் வாழ்த்துக்கள்

சூப்பர் முசினா,பிட்சா நல்லா செய்து இருக்கிற,வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.ஷபி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கும்,பதிவிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றியெல்லாம் வேணாம்மா... முடிஞ்சா ஒரு பீட்சா பார்சல் பண்ணிவிடுங்க... :)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மிக்க நன்றி.இந்தியா ல எந்த ப்ரான்ட் நல்லா போகுதுன்னு தெறியவில்லை.விசாரித்து வாங்கவும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீங்களும் செய்து பாருங்க,நல்லா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

thanks கலை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பார்சல் வந்து சேர்வதர்க்குல் பிட்சா கெட்டு பொய்விடுமே.நீங்க இங்க வாங்க,சேர்ந்து சாப்பிடலாம்,ஷபி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வந்துட்டா போச்சி... எங்க வரனும்...?? பார்சல் பண்ணினா ஒரு பீட்சாவோட முடிஞ்சிடும்... நேர்ல வந்தா எத்தனை காலியாகும்னு தெரியாது.. நல்லா யோசிச்சிக்கோங்க.. சொல்லிட்டேன்.. :)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Musi superpa.uga ella receipum ovan seithu easy podaringa.enakum ovan ilanu kavalaiya irukupa.. nalla iruku parkum pothey .

Be simple be sample

ரொம்ப நல்லா இருக்கும் போல்ல இருக்கே உடனே ட்ரை பன்னனும்

ஆனா முசி, ஈஸ்டை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்தால் தானே ஈஸ்ட் செயல் புரியும்... சாதாரண தண்ணீரில் கலந்தால் முழுவதுமாக செயல் புரியுமா?

வாழ்த்திர்க்கும்,பதிவிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

செய்து பாருங்க,நல்லா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரூம் டெம்பரேட்சரில் உள்ள தண்ணீல் கரைத்தாலே நல்லா வரும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி,
கண்கவரும் பிட்சா
என் குட்டீஸ்க்கு ரொம்ப favourite
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி.செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.