சிக்கன் ரோஸ்ட்

தேதி: June 27, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

சிக்கன் - 3 துண்டுகள்
முட்டை (மஞ்சள் கரு மட்டும்) - ஒன்று
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - முக்கால் தேக்கரண்டி
ரோஸ்ட் பவுடர் - கால் தேக்கரண்டி
சிக்கன் பவுடர் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
பெரிய வெங்காயம், கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தையும், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து தூள் வகைகள் சேர்த்து தயிர், இஞ்சி, பூண்டு விழுது, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.
கடைசியாக உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி, 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு, நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சுவையான சிக்கன் ரோஸ்ட் தயார். வெங்காயம், கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... பார்க்கவே சாப்பிடனும்னு தோணுது. சீக்கிரம் செய்துடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்குங்க.ரோஸ்ட் பவுடர் என்றால் என்ன /?எதுக்கு சேர்க்கனும்?எங்கு கிடைக்கும்?மிக்க நன்றி.

Wonderful recipe.Thanks a lot for sharing it.
What is chicken powder and roast powder,where can we get it?
We like to prepare dis recipe,plz reply.