சிக்கன் பிரியாணி சமையல் குறிப்பு - படங்களுடன் - 26295 | அறுசுவை


சிக்கன் பிரியாணி

வழங்கியவர் : Revathi.s
தேதி : திங்கள், 01/07/2013 - 12:05
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.3125
16 votes
Your rating: None

 

 • பாஸ்மதி அரிசி - 3 டம்ளர்
 • சிக்கன் - முக்கால் கிலோ
 • வெங்காயம் - 3
 • தக்காளி - 3
 • இஞ்சி - ஒரு பெரிய துண்டு
 • முழு பூண்டு - 5
 • பச்சை மிளகாய் - 5
 • தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
 • பிரியாணி தூள் - ஒரு தேக்கரண்டி
 • தயிர் - ஒரு கப்
 • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
 • பட்டை, அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் - பொடிக்க
 • எலுமிச்சை பழம் - ஒன்று
 • சிக்கன் 65 பவுடர் - ஒரு தேக்கரண்டி
 • முட்டை - 4
 • புதினா - அரைக் கட்டு
 • மஞ்சள் கலர் பவுடர், கேசரி பவுடர் - சிறிது
 • எண்ணெய்
 • உப்பு

 

எலும்பில்லாத சிக்கனை தனியாக எடுத்து 65 பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும். மீதியுள்ள சிக்கனுடன் தயிர், மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். புதினாவை சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து பொடித்தவற்றைச் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள புதினாவை சேர்க்கவும்.

பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு தயிரில் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து பிரட்டி, இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் பிரியாணி தூள், தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் களைந்த அரிசியை சேர்க்கவும். அரிசி சேர்த்து குக்கர் விசிலை எடுத்துவிட்டு மூடி, முழு தீயில் 5 நிமிடங்கள் வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து திறந்து ஒரு முறை மெதுவாக அடியோடு கிளறி விசில் போட்டு மூடி 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.

65 பொடி கலந்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். முட்டையை பொடிமாஸ் செய்து கொள்ளவும்.

10 நிமிடங்கள் கழித்து குக்கரை இறக்கி, ஸ்டீம் குறைந்ததும் குக்கரை திறந்து பிரியாணியை தட்டில் கொட்டி ஆறவிடவும். அதில் பொரித்த சிக்கன், முட்டை பொடிமாஸ் சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். சிறிது தண்ணீரில் கேசரி பவுடர், மஞ்சள் கலர் பவுடர் சேர்த்து கரைத்து ஊற்றி கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

சுவையான சிக்கன் பிரியாணி ரெடி. பரிமாறும் போது நன்கு ஊறி மேலும் சுவையாக இருக்கும்.

இதை குஸ்கா முறையில் செய்து, அனைத்து சிக்கனையும் 65 ஆக பொரித்து சேர்க்கலாம். குஸ்கா செய்ய சிக்கனை தவிர்த்து, சிக்கன் வேக வைத்த நீரை மட்டும் சேர்த்து இதே முறையில் செய்யலாம்.சிக்கன் பிரியாணி பார்க்கவே

சிக்கன் பிரியாணி பார்க்கவே சூப்பரா இருக்குது ரேவதி. சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள் செல்லம். நான் தான் முதல் கமெண்ட் ஆ அய் ஜாலி......உங்க வீட்டுக்கு நான் வந்தா இதே மாதிரி செய்து தா ரேவதி....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

எனது குறிப்பை வெளியிட்ட

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா &அறுசுவைகுழுவினர்க்கு நன்றி..

Be simple be sample

kavitha saravanan

ஹாய் கவி செல்ல்ம் .உனக்கு இல்லாததா எப்ப வரனு ஒரு போன் போடு அடுத்த நிமிடமே ரெடி பண்ணிடறேன்..தான்க்ஸ் கவி

Be simple be sample

Briyani

Super priyani...pakave alagarku..kandipa senju pathudren...thank u

Kalam pon ponrathu

சிக்கன் பிரியாணி

சூப்பர் டூப்பர் சிக்கன் பிரியாணி ரேவ்...(y), பார்க்கும்போதே அசத்துது. போன் லெஸ் சிக்கனை வறுத்து சேர்த்து இருப்பது புதுமை, அடுத்த முறை செய்யும் போது ட்ரை செய்துடறேன், வாழ்த்துக்கள் ரேவ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சூப்பரா, கலர்ஃபுல்லா இருக்கு

சூப்பரா, கலர்ஃபுல்லா இருக்கு ரேவதி.... வாழ்த்துக்கள்......

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சிக்கன் பிரியாணி

வாவ் சிக்கன் பிரியாணி பார்க்கும் போதே சாப்பிட தோணுது சிக்கன் பொரித்து சேர்த்து இருப்பது வித்தியாசமா சூப்பர்ரா இருக்கு வாழ்த்துக்கள்

Hi

revathi akka briyani superrrrrrrrr......

kutimarana

தான்க்ஸ் பா.செய்து பாருங்க .டேஸ்ட்டும் நல்லாருக்கும் நிச்சயமா.

Be simple be sample

sumi babu

ஹாய் சுமி தான்க்யு டியர்..ம்ம்ம் சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்க எப்படி இருந்துதுனு ஒகேயா..

Be simple be sample