ஆலு பரோட்டா

தேதி: July 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (15 votes)

 

மைதா மாவு (அ) கோதுமை மாவு - 4 கப்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பில்லிங் செய்ய:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்


 

வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, மல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும்.
வதக்கிய கலவையுடன் உருளைக்கிழங்கைச் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு மசித்துவிடவும்.
மாவில் பட்டர், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவில் ஒரு உருண்டை அளவு எடுத்து சப்பாத்தி போல இட்டுக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு கரண்டி அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
மசாலா கலவை வெளியில் தெரியாதவாறு மூடி உருண்டையாக்கி, பின்னர் அதை மொத்தமான சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.
தவாவை காயவைத்து எண்ணெய் ஊற்றி அதில் தயார் செய்த சப்பாத்தியை வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான ஆலு பரோட்டா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு சிஸ்டர்... என் மகளுக்கு ஆலு பராட்டா ரொம்ப பிடிக்கும்... கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Superpa.naanum tri pani parkiraen

Be simple be sample

ஆலு பரோட்டா பார்க்க சூப்பர்ரா இருக்கு

Musi Alu Parrota romba easy ya irukku

kandippa nan seiren

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கு நன்றி,உமா.செய்து பார்த்து சொல்லுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி,செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி,செய்து பார்த்து சொல்லுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஆலூ சப்பாத்தியாக செய்து பார்த்தேன்,மிக அருமையாக இருந்தது.நன்றி