மின்ட் கேரட் புலாவ்

தேதி: July 8, 2013

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (6 votes)

 

புதினா -ஒரு கட்டு
பாஸ்மதி அரிசி-1 கப்
கேரட்-3
பெரிய வெங்காயம்-2
பட்டை-சிறு துண்டு
லவங்கம்-1
சோம்பு-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்
சின்ன வெங்காயம்-5
பச்சைமிளகாய்-1(காரத்திற்கேற்ப)
எண்ணைய்-வதக்க
உப்பு தேவைக்கு


 

புதினா இலைகளை சுத்தம் செய்து ,அதனுடன் சின்ன வெங்காயம் ,சீரகம்,பட்டை ,லவங்கம் சேர்த்து அரைக்கவும்.
கேரட்டை துருவவும்
வெங்காயம் மெலிதாக நறுக்கவும்

வாணலியை சூடாக்கி எண்ணை விட்டு சோம்பு தாளிக்கவும்
அதனுடன் வெங்காயம் ,இஞ்சிபூண்டு பேஸ்ட் ,பச்சை மிளகாய் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
கேரட்டை போட்டு வதக்கவும்.
அரைத்த புதினாவை போட்டு வதக்கவும்
அதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு வதக்கவும்.
அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு கலக்கி உப்பு சேர்த்து மூடாமல் மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.பின் தீயை குறைத்து(சிம்மில்) 10 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்
தண்ணீர் வற்றியதும் மூடியின் மேல் ஒரு சுடுநீர் நிரம்பிய மூடிவைத்த பாத்திரத்தை வைத்து 5 நிமிடம் தம் போடவும்...


விருப்பப்பட்டால் பச்சை பட்டாணி இருந்தால் ஒரு கைப்பிடி வெங்காயம் வதக்கியபின் சேர்த்து வதக்கவும்.
ப்ரஷர் குக்கரில் வைக்கவிரும்பினால் ஒன்ரரைகப் நீர் விட்டு சிறு தீயில் ஒரு விசில் விட்டு பிறகு ஐந்துநிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Nala vasanaiya irukum pola iruke sister
senju pathutu solren
sister inga mint mothama than kidaikum vangina sikiram azhiluki poidum atha epadi pathirapaduthurathunu theriuma

Be simple and be a sample

இலையில் நீர் துளிகள் இருந்தால் தான் அழுகும்.புதினா தழையை கழுவி இலைகளை மட்டும் ஆய்ந்து பின்பு ஒரு தட்டில் அல்லது தாளில் பரவலாக போட்டு நிழலில் உலர்த்தி ஒரு பிளாஷ்டிக் பாக்ஸ்ஸில் வைத்து பிரிஜ்ஜில் 10 நாட்களுக்கு பிரெஸ்ஸாக பயன்படுத்தலாம்.

ஹாய் அக்கா மின்ட் கேரட் புலாவ் செய்தாச்சு நல்லா இருந்தது நன்றி