புளி இஞ்சி

தேதி: October 27, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

புளி - பெரிய எலுமிச்சை அளவு
பொடியாக நறுக்கிய இஞ்சி - 3/4 கப்
பச்சை மிளகாய் - 10
மிளகாய் வற்றல் - 5
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

முதலில் பச்சைமிளகாயையும், இஞ்சியையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். புளியை சூடான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து கெட்டியாக கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின் புளிக்கரைச்சல் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
சிறிது கெட்டியான பின் பெருங்காயத்தூள், வெல்லம், சிறிது எண்ணெய் விட்டு இறக்கவும்.


புளிக்கு பதில் 1 1/2 மேசைக்கரண்டி புளி பேஸ்ட்டை தண்ணீரில் கரைத்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்