முட்டை டெவல்

தேதி: July 13, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (9 votes)

அவித்த முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
சில்லி கார்லிக் சாஸ்/ டொமேட்டோ சாஸ் - ஒன்றரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை தோலுரித்து பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும். (பொரிக்கும் போது முட்டையில் ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளவும்).
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், சில்லி ஃப்ளேக்ஸ், சாஸ் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். (சில்லி ஃப்ளேக்ஸுக்கு பதில் மிளகாய் தூளும் சேர்க்கலாம்).
அதனுடன் பொரித்த முட்டைகளைச் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான முட்டை டெவல் தயார். ஃப்ரைட் ரைஸ் முதல் தக்காளி சாதம் வரை அனைத்து வகையான சாதங்களுக்கும் ஏற்றது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

என் ஃபேவரிட் இது. சூப்பர் குறிப்பு.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நல்லா செய்து இருக்கிங்க,படங்கள் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்ல டிஷ் சொல்லி இருக்கீங்க பர்தாலே சாப்பிடணும் போல் இருக்கு

நன்றி சிஸ்டர்...

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனிதா. அறுசுவைக்கு உங்களை வரவேற்கிறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பார்த்ததுமே பசிக்குதே :) சூப்பர் குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

superra irukku sister

Uma easy kurippu.parkumpothey sama yammy ....sikkiram tri panidaraenpa

Be simple be sample

ஹாய் உமா அக்கா
ஐ லவ் தி ரெசிபி சாதாரணமா நான் அவித்த முட்டையை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி தான் செய்து இருக்கேன்
ஆனா முட்டையை பொரித்து செய்தது இல்ல..
கண்டிப்பா செய்துட்டு சொல்லுரென் நல்ல குறிப்பு...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி சுவர்ணா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Tnk u sister.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Tnk u Revathi. seythupaathuttu epdi irunthathunnu sollunga.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி கனி. கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர். எனக்கு பிடிச்சிருக்கு. :) ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முட்டை டெவில் சூப்பர் பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு வாழ்த்துக்கள்

நன்றி நஸ்ரின்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முட்டை டெவல் பார்க்கவே அருமையா இருக்கு! கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் உமா.

அன்புடன்
சுஸ்ரீ

கருத்துக்கு நன்றி சுஸ்ரீ. செய்து பாத்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா