சிறிய உருளைக்கிழங்கு வறுவல்

தேதி: October 28, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

சிறிய உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
மிளகாய்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
சீரகத்தூள் - அரைதேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
ஓமம் - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக ஐந்து நிமிடம் வேகவைத்து ஆற வைக்கவும்.
பிறகு சற்று பெரிய அளவுள்ள கிழங்கை மட்டும் இரண்டாக நறுக்கி எல்லாகிழங்கையும் ஒரே அளவாக இருக்கும் படி செய்யவும். மற்ற கிழங்குகளை முள்ளுக் கரண்டியால் குத்தி விடவும். தோலை நீக்க வேண்டாம்.
ஒரு சிறிய கோப்பையில் எல்லாத்தூளையும் சேர்த்து கலக்கி வைக்கவும்.
பிறகு வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் ஓமம், உளுத்தம்பருப்பை போட்டு வறுக்கவும்.
பிறகு ஆற வைத்துள்ள கிழங்கை போட்டு நன்கு கலக்கி விடவும்.
தொடர்ந்து எல்லாத்தூளையும் போட்டு கறிவேப்பிலையையும் போட்டு நன்கு கிளறி விட்டு கால்கோப்பை தண்ணீரை தெளித்து விட்டு நன்கு வறுக்கவும்.
கிழங்கு முழுவதும் வெந்து நன்கு ரோஸ்ட்டானதும் இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் மனோகரி மேடம்,

இன்று உங்க உருளைகிழங்கு வறுவல் செய்திருந்தேன். ரொம்ப டேஸ்ட்டியாக வந்தது. குழந்தைங்க இருவரும் நன்றாக இருக்கு என்று சொல்லி சாப்பிட்டர்கள். குறிப்புக்கு ரொம்ப தேங்ஸ் மேடம்!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ