HALLOWEEN.

Halloween என்பதால் மஞ்சள் பூசனி கிடைக்கிறது.அதில்
என்ன recipes செய்யலாம் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்

சஜூனா Halloween என்றால் என்ன?

Dear Namura.
Halloween is a festivel celebrated by most countries and kids were costumes like ghosts and some people blow some fire works up and this is all i really know about halloween.

sajuna

ஐரோப்பியர்கள் நவம்பர் 1 தேதி புது வருடம் கொண்டாடுவார்கள். அன்று தான் குளிர் காலமும் ஆரம்பம். குளிர் என்றால் இருட்டு அதிகம். தீய சக்தி, ஆத்மா நடமாட்டம் இருக்கும், அந்த ஆத்மா மக்களை நெருங்காமல் இருக்க பாதிரியார் தெய்வத்தை வணங்கி தீயை மூட்டுவார்கள். இதன் மூலம் எந்த தீய சக்தியும் மக்களை அண்டாது, இது தான் Halloween.அன்று குழந்தைகளுக்கு பேய் வேடம் போட்டு, நண்பர்கள் வீட்டிற்கு சென்று சாக்லேட் வாங்கி மகிழ்வார்கள்.

டியர்,sajuna
மஞ்சள் பூசணியில் செய்யும் recipy என்னுடைய குறிப்பில் சேர்த்துள்ளேன்.சமைத்து பாருங்கள்

பூசணிக்காய் கதை
நான் மஞ்சள் பூசணிக்காய் முதல் தடைவையாக வாங்கினேன்.
அறுசுவை.காம் தோழிகள் நிறைய ரெசிப்பீஸ் கொடுப்பார்கள்
என்று அதுவும் பெரிய பூசணிக்காயாய் வாங்கிவிட்டேன்.
நானும் wait செய்து பார்தேன்.ஒருவரும் தரவில்லையே என்று
பிறகு அல்வா நியாபகம் வந்தது.அதும் அதில் கோவா சேர்த்து
செய்யனும் என்று எனது இன்சுவை இனிப்புகள் புத்தகத்தில்
இருந்தது வேறுவழியில்லாமல் கோவா ச்ய்துஎடுத்து பெரியபூசணிக்காயை துருவி
எடுத்து ஒருவழியா அல்வாவாக்கிவிட்டேன்.எனது பூசணிக்காய் அல்வா ஆன பின்பு பூசணிக்காய் recipeயாய் வருகிரது.மீன்டும் கடைக்கு போய் சிறிய பூசணிக்காய் கிடைத்தால் உங்கள்
recipeயை செய்து பார்கிறேன் கிடைக்காவிட்டால் அடுத்த வருடம் halloweenக்கு பூசணிக்காய் வரும் அப்போது செய்து பார்க்கிரேன்.
நிங்கள் என்னிடம் தெரிவித்தமைக்கு மிகுந்த சந்தோசம். நன்றி.

sajuna

டியர் சாஜுனா, தங்கள் பூசணிக்காய் கதை நல்ல தமாஷாக இருந்தது.ஒரு வழியாக அல்வா கிளறியதாக எழுதியிருந்தீர்கள்.அல்வா எப்படி இருந்தது. இப்பொழுதல்லாம் கடைகளில் தான் வருடம் முழுவதும் காய்கள் கிடைக்கின்றதே! நீங்கள் வாழும் பகுதியில் எப்படியோ தெரியவில்லை.அதை வாங்கி அறுசுவை தோழிகள் கொடுத்த குறிப்புகளை செய்து பார்கலாம் கவலையை விடுங்கள். நானும் செய்து பார்க்க போகின்றேன்.நன்றி.

பூசணிக்காய் அல்வா நன்றாக இருந்தது.ஆனால் வேலை டிரில் எடுத்துவிட்டது காரணம் கோவா செய்தது. கேஸ் அடுப்பாக இருந்தால் நினைத்த நேரத்தில் குறைக்கலாம் அதிகப்படுத்தலாம் எலக்க்டிரிக் அடுப்பு என்பதால் கோவா அடிபிடிக்காமல் செய்வதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.நான் வசிக்கும் பகுதியில் நம்மவூர் காய்கள் கிடையாது.பூசணிகாய் ஹெலவீன் சமயத்தில் தான் வரும். நம்மவூர்காய் வாங்க வேற ஊருக்கு போனால் வாங்குவோம். .நிங்கலும் பானு கனி தந்த டிப்ஸ் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிரது .மிகுந்த சந்தோசம் நிங்க கேட்டது.

sajuna

வணக்கம் சகோதரிகளே! ஒரு விசு படத்தில் வரும் டயலாக் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதாவது ஒரு பைத்தியகார ஆஸ்பதிரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற ஒரு பைத்தியகார வைத்தியருக்கே பைத்தியம் பிடித்தால் அந்த பைத்தியகார வைத்தியர் எந்த பைத்தியகார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற ஒரு பைத்தியகார வைத்தியர் கிட்ட தன் பைத்தியத்திக்கு வைத்தியம் பாத்துப்பார். ஞாபகம் இருக்கா.

இதே ஸ்டைலில் மஞ்சபூசணி பத்தின கேள்விக்கு மஞ்சபுசணி குறிப்பு குடுத்த பானுகனிக்கே மஞ்சபூசணி குறிப்பு தேவைப்பட்டா அந்த மஞ்சபூசணி குறிப்பு குடுத்த பானுகனி எந்த மஞ்சபூசணி குறிப்பு குடுத்த அறுசுவை சகோதரி கிட்ட மஞ்சபூசணி குறிப்பு கேப்பார்..(ஒத்தை சதம்(100),இரட்டை சதம்(200),முட்டை சதம்(300)நட்டை சதம்(400) அடித்த சகோதரிகளுக்கு நடுவே வெறும் 16 குறிப்பு மட்டும் குடுத்துட்டு நான் இப்படி சொல்றது கொஞ்சம் ஓவரா இருக்கோ?இதெல்லாம் வாழ்க்கைல சகஜமப்பா)

முடியல!என்னால சத்தியமா முடியலை!

ஊரில் இருந்து வந்த இரண்டு பூசணிக்காயில சின்னதை(சுமார் 7 கிலோ) ஏமாந்த எங்க மேனேஜர் தலையில கட்டிடேன்.
11 கிலோவில் ஒன்று எங்க வீட்டு ஹாலில் உக்காந்து என்னையே பார்த்து கொட்ட கொட்ட முழிக்குது.அதை பீஸ் பண்ணி அக்கம் பக்கம் கொடுத்தாலும் எனக்கே எனக்குன்னு 2அல்லது3 கிலோ தேறும் போல.
வீட்டில் புதுசாய் ஏதாவது பண்ண சொல்லி ஆர்டர்.
வேலைகாரம்மா கிட்ட பாதியை தள்ளலாமுன்னு பார்த்தால் ''ஐய்ய இத்த யாரு துண்ணுவா,ஆக்கி துண்ணுட்டு கைய இஸ்குது கால இஸ்குதுன்னு பேஜார் பண்ணும், நீயேதுண்ணுமா கருவாடு போட்டு பண்ண தம்மாத்தோண்டு குடு'' அப்படின்னுட்டு அவ எஸ்கேப் ஆயிட்டா.
இப்ப நானும் மஞ்சபூசணியும் மட்டும் தனியா வீட்டில் இருக்கோம்.
அதனால அறுசுவை சகோதரிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து எங்க எங்க மஞ்சபூசணி குறிப்பு லிங்க் இருக்கோ அதையெல்லாம் இங்க குடுத்து ஹெல்ப் பண்ணுங்கோ. ஹோக்கே

பின் குறிப்பு:-யாருப்பா அங்கே ஓரமா நின்னு சிரிக்கிரது ஓஓ மனோகரிமேடமும்,சாஜூனாவுமா!!!
வேண்டாம்! இதெல்லாம் நல்லால்ல!! அழுதுடுவேன் ஆமா!!!

பானு கனி அஸ்ஸலாமு அலைகும் நானும் ஓப்பன் பன்ன வேண்டாம் என்று சினைத்தேன் பேச்சு ஸ்வாரஸ்யமா ஓஅடுது,
பூசனிகாய் ரொம்ப நல்லது உடம்புக்கு, சாம்பார் செய்ய்ங்க, ஹல்வா கிளறி வைத்தால் பிரீஜரில் போட்டு வைய்ய்ங்கள்.
கோவா செய்து இந்த விஷ பரிட்சையெல்லாம் வேண்டாம் நல்ல பெரி மில்க் மெயுட் டின்ன வாங்க ஊற்றுங்கோ ஊற்றுங்கஓ (அசோகன் ஸ்டைலில் தான் இதை நிங்க படிக்கனும்)
பூசனிகாய் கூட்டு செய்யுங்கோ.
வேலை நிறைய இருக்கு இதேடு ஒரு மணிநேரம் கழித்து தான் வரனும், மனோகரி மேடம் வணக்கம்.

ஜலீலா

Jaleelakamal

வ அலைக்கும்ஸலாம் ஜலீலா, என் பதிவுக்கு பதில் அளித்த லேடி அசோகனுக்கு நன்றி.பொதுவாக நான் பூசணிக்காயில் காரசரமான வெரைட்டிதான் செய்வேன்.இந்தமுறைதான் அல்வா செய்யலாம் என்று இருக்கேன்.
ஆனால் ஒரு முறை pumkin pai என்ற குறிப்பு எங்கேயோ பார்த்தேன்,அதுதான் அறுசுவை சகோதரிகளுக்கு கொக்கி போட்டு பார்த்தேன்.ஒரு அசோகன்..இல்ல இல்ல ஒரு மீன் மாட்டி இருக்கு மற்ற மீன்களுக்காக வெயிட்டிங்.
மீண்டும் ஒரு பின் குறிப்பு:வாவ் ஜலீலா!! நீங்க முட்டை சதமா,வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்