சோயா சாஸ் சிக்கன்

தேதி: July 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (5 votes)

சிக்கன் - ஒரு கிலோ (சதைப்பகுதி மட்டும்)
சோயா சாஸ் - 3 - 4 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதுடன் மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். (காரத்திற்கேற்ப மிளகு மற்றும் பச்சை மிளகாயின் அளவை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்துக் கொள்ளலாம்).
அரைத்தவற்றை சிக்கனுடன் சேர்த்து பின் சோயாசாஸ், உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். (சாஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கும் போது கவனமாக இருக்கவும்).
கடாயில் ஊறவைத்த சிக்கனைப் போட்டு வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனில் இருக்கும் நீரே போதுமானது. சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் நன்றாக வற்றியதும். வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
பின் அதே கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலையை நன்கு பொரியவிட்டு, வேக வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடங்கள் மெல்லிய தீயில் பிரட்டி இறக்கவும்.
சுவையான சோயா சாஸ் சிக்கன் தயார். ஃப்ரைட் ரைஸ், ரச சாதத்திற்கு நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹாய் உமா அக்கா ரொம்ப எளிமையான செய்முறை .. டிப்ரண்ட்டா இருக்கு நல்ல குறிப்பு ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுலபமாவும் இருக்கு, நல்லாவும் இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈசி குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Ada very simple.superppa...

Be simple be sample

நன்றி கனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனிக்கா...

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நன்றி அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி ரேவதி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா ஈசி & டேஸ்டி சிக்கன் சூப்பர்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுவர்ணா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா