பூண்டு லேகியம்

தேதி: October 28, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூண்டு - 1/2 கிலோ
பால் - 50 மி.லி
கருப்பட்டி - 1/2 கிலோ
நல்லெண்ணெய் - 100 மி.லி


 

பூண்டை உரித்து பால் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
பூண்டு சீக்கிரம் வெந்து விடும் மிக அதிகமாக வேக தேவையில்லை 1/2 கிலோ பூண்டு 3 நிமிடங்களில் வெந்து விடும்
வெந்த பூண்டை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
கருப்பட்டியை 1/2 கப் தண்ணிர் விட்டு கரைத்து கல் நீக்கி விடவும்
கருப்பட்டி முழுவதும் கரையவில்லையெனில் அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ளவும்
அந்த தண்ணீரில் பூண்டு பேஸ்டை போட்டு அடுப்பில் வைத்து கிளறவும்
கிளற பின் அல்வா பதத்திற்கு வரும் . லேகியத்தை தொட்டால் கையில் ஒட்டக்கூடாது
பின்பு நல்லெண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறி இறக்கவும்
பார்ப்பதற்கு அல்வா போன்றுதான் இருக்கும்
சாதாரணமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் ஒரு தேக்கரண்டி சாப்பிடவும்
குழைந்தைகளுக்கு பால் கொடுப்பவர்கள் 2 வேளை சாப்பிடலாம்


மேலும் சில குறிப்புகள்