சப்பாத்தி ரோல்

தேதி: July 23, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (9 votes)

 

சப்பாத்தி மாவு - தேவைக்கு
உப்பு - சிறிது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
ஸ்டஃபிங் தயாரிக்க:
கொத்துக்கறி - 300 கிராம்
சிகப்பு மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய்
சுரைக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
மட்டன் மசாலா - ஒரு கரண்டி
கறி மசாலா - ஒரு கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கெட்சப், சில்லி சாஸ் - சிறிது
சீஸ் - சிறிது
லெட்யூஸ் இலை - சிறிது
உப்பு - சிறிது


 

சப்பாத்தி மாவுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். குடை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். (இதில் ஃப்ரோசன் கறியை உபயோகித்துள்ளேன். ஃப்ரெஷ் கறியும் பயன்படுத்தலாம்).
வாணலியில் எண்ணெய் ஊற்றி கறியைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
அதனுடன் குடை மிளகாய், வெங்காயம், சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
பின் மசாலா வகைகள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஸ்டஃபிங் தயார்.
பிசைந்து வைத்துள்ள மாவை சற்று மெல்லியதாக பெரிய சாப்பாத்தியாக போட்டுக் கொள்ளவும்.
பின் சப்பாத்தியை தவாவில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். அதன்மீது பெரியவர்களுக்கெனில் சில்லி சாஸும், குழந்தைகளுக்கெனில் கெட்சப்பும் தடவிக் கொள்ளவும்.
அதன்மேல் சிறிது ஸ்டஃபிங்கை வைக்கவும்.
பின் சிறிது சீஸ் வைக்கவும்.
சீஸின் மேல் சிறிது லெட்யூஸ் வைக்கவும்.
சப்பாத்தியின் இரண்டு ஓரங்களையும் இவ்வாறு மடிக்கவும்.
சப்பாத்தியை அப்படியே ரோல் செய்யவும்.
சுவையான சப்பாத்தி ரோல் தயார். இதை இரவு நேர உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது குழந்தைகளுக்கு லஞ்ச்சாகவோ கொடுக்கலாம். எல்லா நேரத்திற்கும் ஏற்ற உணவு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் டேஸ்டி சப்பாத்தி ரோல் சூப்பரா இருக்கு அக்கா...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் ரஸியா.... அருமையான சிற்றுண்டி.. வாழ்த்துக்கள்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

colour full dish, super ra eruku, nana vitla seichu pathu soluren

ரொம்ப நன்றி கனிமொழி

Eat healthy

ஹெல்லோ ஷபீ ரொம்ப நன்றி பின்னூட்டத்திற்கு

Eat healthy

நன்றி நன்றி

Eat healthy

செஞ்சி சாப்டுட்டு எப்படி இருந்திசின்னு சொல்லுங்க

Eat healthy

சூப்பரா இருக்கு படங்களும் குறிப்பும். ஹெல்தி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்போவும் முன்னடியே வந்து பதிவு போடுர வனிதா இப்போ ஏன் லேட்?பரவால்ல நன்றி வனிதா

Eat healthy

Seythu paathuttu sollunga

Eat healthy

சப்பாத்தி ரோல் அருமை,நல்லா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

thank u musi

Eat healthy

ரஸியா சப்பாத்தி ரோல் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி ஸ்வர்னா

Eat healthy