மணிப்புட்டு

தேதி: July 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (9 votes)

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு

அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கொதிக்கும் நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும். (தண்ணீருடன் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு மாவில் ஊற்றி பிசைந்தால் மேலும் சுவை கூடும்).
பிசைந்த மாவை சிறு மணிகள் போல் உருட்டி வைக்ககவும்.
புட்டுக் குழாயில் சிறிது தேங்காய் துருவல் போட்டு, அதன்மேல் சிறிது புட்டு மணிகளைப் போடவும். பின்னர் மீண்டும் தேங்காய் துருவல், புட்டு மணிகள் என மாற்றி மாற்றி புட்டுக் குழாயை நிரப்பவும். (அதிக அளவில் செய்யும் போது சிறு உருண்டைகளாக்குவது சிரமமாக இருக்கும். சேவை நாழி அல்லது இடியாப்ப அச்சிலிட்டு நேரடியாக புட்டுக் குழாயில் பிழிந்தும் செய்யலாம். புட்டுக் குழாய் இல்லையெனில் இட்லி தட்டில் வைத்து தேங்காய் துருவல் கலந்து புட்டு மணிகளைப் பரவலாக வைத்து வேக வைக்கலாம்).
நிரப்பிய பின்பு ஆவியில் வேக வைக்கவும். புட்டுக் குழாயின் மேல் நீராவி வெளிவந்ததும் 5 நிமிடங்களில் எடுத்துவிடலாம். பதமாக வெந்திருக்கும்.
சுவையான மணிப்புட்டு தயார். காரமான மீன் குழம்பு அல்லது சிக்கன் குழம்பு பெஸ்ட் காம்பினேஷன். தேங்காய்ப் பாலும், சீனியும் கூட சுவையாக இருக்கும்.

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு என்பது பச்சரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து ஈரம் போக துணியில் போட்டு உலர்த்தி, மிக்ஸியில் மாவாக்கி, சலித்து அதை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறவைத்த மாவு.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹாய் கவிசிவா... ரொம்ப நல்லா இருக்கு... செய்து பார்க்கனும். என் கணவருக்குப் பிடிக்கும்... பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு அப்படின்னா என்ன?? கடையில வாங்கற அரிசி மாவு தானே??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Super. Vidhyasama iruku. Kulantainka virumbi sapiduvankaSeithu partiddu solranka. Kavi unkaluku vadasery a?

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

ரொம்ப சூப்பரா செய்து காமிச்சு இருகீங்க அக்கா.. அம்மக்கு ரொம்ப ஃபேவரிட் இது ரொம்ப நாள் கழிச்சு இந்த ரெசிபி காகுறேன் .. கடசி படம் அழகோ அழகு ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்புகளை வெளியிட்டு ஊக்குவிக்கும் அட்மின் & டீம்க்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஷபி. செய்து பாருங்க. பதப்படுத்தப்பட்ட அரிசிமாவுன்னு நான் பயன் படுத்தியிருப்பது 3முதல் 4மணிநேரம் ஊறவைத்த பச்சரிசிய துணியில் இட்டு ஈரம்போக உலர்த்தி மிக்சியில் மாவாக்கி சலித்து பின்னர் வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து எடுத்த மாவு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவிராஜ்! எப்படி கண்டுபிடிச்சீங்க :). சிலகாலம் வடசேரியில் இருந்தோம். இப்போ அங்கே இல்லை :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி! அம்மாக்கு செய்து கொடுத்து பிடிச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி அக்கா சூப்பர். ரொம்ப ரொம்ப நன்றி. இன்னைக்கே செஞ்சிட்டு எப்டி இருந்ததுன்னு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி உமா! ஆனா நீங்க கேட்ட மணிப்புட்டு ரெசிப்பி இதுதானான்னு எனக்குத் தெரியலை. இது கேரளாவில் செய்யும் ரெசிப்பி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இதுதான் அக்கா. இதையே மைதவுல செஞ்சு சாப்டுருக்கேன். நா செஞ்சிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப சூப்பர் :) குறிப்பை கேட்டு வாங்கிய உமாவுக்கும், அதை அழகாக செய்துகாட்டிய கவிசிவாக்கும் நன்றி நன்றி. நானும் ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi frnds quiz open aakala en

Sorry rendu pathivu..

Be simple be sample

Hai kavi.supera iruku.ana enkitta puttu kuzaai illaye...idly thattulaepadi vaikanum..idiyappam maavu use panalama

Be simple be sample

பார்க்கவே நல்லா இருக்கு மணிப்புட்டு அழகா உருட்டி இருக்கீங்க. செய்துடுறேன் மாவுகூட ரெடியா இருக்கு. நன்றி கவி

மணிப்புட்டு ரொம்ப அருமையாக இருக்குங்க, அசத்துங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

ஒருபொண்ணு கேட்டான்னவோடன அத கேட்டு சொன்ன வனியும் ,செஞ்சு காட்டின கவிசிவாவும் அறுசுவைலதான் பாக்கிறேன்.அருமை ...*****

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மணிப்புட்டு பார்க்கவே ரொம்ப அழகு.அவசியம் செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவி அக்கா சூப்பர்.... நேத்தே செஞ்சுட்டேன். நா தேங்காய்பால்லதான் மாவு பிசைஞ்சேன். அருமையா இருந்தது. தேங்ஸ்...

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கவிசிவா குழாய் புட்டு செய்வோம் குழாயில் மாவு தேங்காய் சீனின்னு மாற்றி வைத்து அவிப்போம் இதுப் போல செய்தது இல்லை தேங்காய்பால் ஊற்றி மாவு பிசைந்தால் ம் ம் டேஸ்டா இருக்கும் நிச்சயம் செய்ய போறேன் மணிப்புட்டு

வனி நான் தான் உங்களுக்கும் உமாவுக்கும் நன்றி சொல்லணும். கிட்டத்தட்ட மறந்தே போன இந்த ரெசிப்பியை ஞாபகப்படுத்தினதுக்கு. நீங்க கேட்டதும்தான் ஆமால்ல பாட்டி செய்து கொடுப்பாங்களேன்னு ஞாபகம் வந்துச்சு :)

ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க வனி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரேவதி! இடியாப்ப மாவில் செய்யலாம். ஆனால் மணிகள் ஆறியதும் கொஞ்சம் ஹார்ட் ஆயிடும். ஆனால் சூடா சாப்பிட நல்லா இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி தேவி! செய்து பார்த்து சொல்லுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி குணா தம்பி'ங் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உண்மைதான் அஸ்வதா! அதுக்கு அட்மின் அண்ணாக்குதான் நன்றி சொல்லணும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி முசி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உடனே செய்து சொன்னதில் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உமா! நன்றி!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி உமாகுணா! கண்டிப்பா செய்து பாருங்க. டேஸ்டியா இருக்கும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி மணிப்புட்டு மணி மணியா அழகா அருமையா இருக்கு (y) கண்டிப்பா செய்து பாக்கனும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுவா! செய்து பாருங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மணி புட்டு மிக அருமை கவி

Jaleelakamal

நன்றி ஜலீலாக்கா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!