பழம்பூரி

தேதி: October 29, 2006

பரிமாறும் அளவு: 2 - 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

நேந்தரம் பழம் - ஒன்று
மைதா மாவு - ஒரு கோப்பை
அரிசிமாவு - கால் கோப்பை
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
ஆப்ப சோடா - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கோப்பை


 

மைதாவுடன் அரிசிமாவையும் நன்கு கலக்கவும். அதனுடன் எண்ணெயைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டு ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி சற்று கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
பிறகு பழத்தின் தோலை நீக்கி விட்டு நீளவாக்கில் அல்லது பிடித்தமான வடிவத்தில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு சற்று குழிவான எண்ணெய் சட்டியில் எண்ணெயை நன்கு காயவைத்து பழ வில்லைகளை மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மிகவும் சுலபமான மாலை நேர உணவாக செய்து பரிமாறவும். சூடாக இல்லாமல் சற்று ஆறிய பிறகு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.


இந்த பலகாரத்தை மற்ற வகை வாழைப்பழத்திலும் செய்யலாம். ஆனால் நேந்திர வாழை எண்ணெயில் நின்று வேகும். மற்ற வகை வாழைப்பழம் எண்ணெயில் போட்ட உடனே குழைந்து விடும். ஆனால் சற்று தடிமனான துண்டுகள் போட்டும் செய்யலாம். கேரளாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

thanx for the awesome snack ,mam :-)