ஹலீம் கஞ்சி

தேதி: July 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

ஓட்ஸ் - ஒரு கப்
கேரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இறைச்சி - கால் கிலோ
மல்லித் தழை, புதினா - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
பால் - அரை டம்ளர்
உப்பு - தேவையான அளவு


 

குக்கரில் பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிய இறைச்சி ஆகியவற்றை போட்டு, அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை போடவும்.
பிறகு இவையனைத்தும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
விசில் வந்த பின்பு சிறிது நேரம் கழித்து ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அதனுடன் ஓட்ஸை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி மீண்டும் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
ஓட்ஸ் மற்றும் காய்கறிகள் நன்றாக வெந்ததும், சிறிது உப்பு போடவும்.
பிறகு பாலை ஊற்றி கிளறிவிட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கிவிடவும்.
சூடாக சாப்பிட சுவையான சத்துள்ள ஹலீம் கஞ்சி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரசியா அக்கா ஹலீம் கஞ்சி ஹெல்தி அண்ட் டேஸ்டி கஞ்சி சூப்பரா இருக்கு ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

etha kanji Diabaties sapadalama

ரஸியா கஞ்சி சூப்பர். ஓட்ஸுக்கு பதில் அரிசி சேர்க்கலாமா? சேர்ப்பதானால் என்ன அரிசி சேர்க்கலாம்?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப சூப்பரா இருக்கு கஞ்சி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரஸீயா,ஹலிம் சூப்பர்,இதே குறீப்பை நேற்று தான் அனுப்பினேன்.ஆனால் நான் கோதுமையில் செய்தேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் ஆளாவந்து பதிவு போட்டதுக்கு நன்றி தங்கை கனிமொழி

Eat healthy

ஓட்ஸ் உடலுக்கு சத்தான பொருள்,இதில் எண்ணெயும் சேர்க்கவில்லை,காய்கறிகளும் சேர்த்துள்ளேன்,தாராளமாக diabeties அருந்தலாம்

Eat healthy

அரிசி சேர்த்தால் அது நோம்பு கஞ்சி போல் இருக்கும்,1 கைப்பிடி பச்சரிசி சேர்த்து செய்ங்க

Eat healthy

நன்றி வனிதா

Eat healthy

ஆமாம் சிலர் உடைத்த கோதுமையிலும் செய்வாங்க,ஆனால் அதை ஊற வைத்து செய்யனும்,ஓட்ஸ் உடனே செய்துடலாம்,கோதுமை சுவையும் நல்லா இருக்கும்,உங்க குறிப்பை எதிர்பார்க்கிறேன் முசி

Eat healthy

Super and it's healthy. Thanks.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

Tnx sathya

Eat healthy