சூப் சாயுர்

தேதி: July 31, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கேரட் - ஒன்று (சிறியது)
முட்டைகோஸ் - 3 இதழ்கள்
பீன்ஸ் - 4
சிறு பூக்களாக உதிர்த்த காலிஃப்ளவர் - முக்கால் கப்
மஷ்ரூம் - 6
கடுகு கீரை (அ) முளைக்கீரை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - ஒன்று (அ) இரண்டு (காரத்திற்கேற்ப)
பூண்டு - 7 பல்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
லெங்குவாஸ் (Galangal root) - ஒரு இன்ச் அளவு (ஃப்ரெஷ் சித்தரத்தை)
எலுமிச்சை இலை - 3
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி
வெஜ் ஸ்டாக் க்யூப் - பாதி (விரும்பினால்)
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - சில துளிகள்


 

பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், நசுக்கிய லெங்குவாஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மஷ்ரூம் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி சோயா சாஸ், சர்க்கரை, வெஜ் ஸ்டாக் க்யூப் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். எலுமிச்சை இலைகளை ஒன்றிரண்டாக பிய்த்து சேர்க்கவும்.
நன்றாக கொதித்து காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் முட்டைகோஸ் மற்றும் கீரையைச் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான சூப் சாயுர் (இந்தோனேஷியன் வெஜ் சூப்) தயார். தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

பச்சை மிளகாயை வதக்கும் போது சேர்க்காமல் பொடியாக நறுக்கி சோயா சாஸில் ஊற வைத்து அவரவர் காரத்திற்கேற்ப சூப் பருகும் போது சேர்த்துக் கொள்ளலாம். மேற்சொன்ன அளவில் நான் வெஜ் சூப் செய்ய விரும்பினால் காய்கறிகளை வதக்கும் போது மெல்லியதாக நறுக்கிய முள் நீக்கிய மீன் அல்லது 100 கிராம் போன்லெஸ் சிக்கன் சேர்த்துக் கொள்ளலாம். டோஃபு, முளைகட்டிய பயிறு போன்றவற்றையும் சேர்க்கலாம். ரைஸ் நூடுல்ஸை தனியாக வேகவைத்து இந்த சூப்புடன் சேர்த்து சூப் நூடுல்ஸாகவும் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி அக்கா ஹெல்தி அண்ட் சூப்பர் சூப் ... நேரம் கிடைக்கும் போது கட்டாயம் செய்துட்டு சொல்லுறேன்.. அண்ட் ஒரு டவுட்...

// லெங்குவாஸ் (Galangal root) - ஒரு இன்ச் அளவு (ஃப்ரெஷ் சித்தரத்தை)//
இதை சேர்க்கறதாலா என்ன சுவை இருக்கும் அக்கா ??

அண்ட் இத சேர்க்காம செய்தா சுவை ஏதாது குறையுமோ ?? விளக்கவும் ப்ளீஸ்.. அருமையான குறிப்பு எப்போதும் போல உங்க ஸ்டைலில்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அக்கா ரொம்ப வித்தியாசமான குறிப்பு. சித்தரத்தை சேர்த்து சூப்.. புதுமையா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப் சாயுர் குறிப்பு வந்திடுச்சா :). இன்னிக்கும் சூப் சாயூர் செய்தேன் சேம் பின்ச் :) நன்றி டீம்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி!

லெங்குவாஸ் சேர்ப்பது சூப் க்கு தனி மணம் கொடுக்கும். சுவையில் வித்யாசம் இருக்காது. இது உடல் கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது. அதனால் இங்கே பெரும்பாலான சமையலில் இதை சேர்ப்பாங்க. இல்லாமலும் செய்யலாம். அந்த மணம் குறையும் அவ்வளவே! சேர்க்காமல் செய்தாலும் சுவையாகவே இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி உமா! இங்கே இந்த லெங்குவாஸ் அதிகம் உபயோகிப்பர்கள். நம்ம சித்தரத்தைதான் இது என்பது தெரியாமல் இருந்தேன். கூகுளாரிடம் கேட்டபோதுதான் இது நம் சித்தரத்தை என்பது புரிந்தது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சூப்பரு சூப்பு.... ரொம்ப நல்லா இருக்கு. இந்த பெங்களூரு குளிருக்கு சூப் நல்லா தான் இருக்கும் :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி! குளிருக்கு இதமா சூடா ஒரு பவுல் சூப் சாயூர் குடிங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!