ஹலீம் கஞ்சி - 2

தேதி: August 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோதுமை ரவை - ஒரு கப்
நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
கீமா - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
தேங்காய் பால் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மல்லித் தழை, புதினா


 

கோதுமை ரவையுடன் கடலைப்பருப்பைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும். மல்லித் தழை, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, மல்லித் தழை, புதினா, கீமா சேர்த்து வதக்கவும்.
கரம் மசாலா தூள், காய்கறி கலவை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் ஊறவைத்த கோதுமை ரவை சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு தேங்காய் பால் ஊற்றி கிளறவும். மல்லித் தழை, புதினா தூவி இறக்கவும்.
சுவையான ஹலீம் கஞ்சி (நோன்பு கஞ்சி) ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா கஞ்சி நல்லா இருக்கு.... வித்தியாசமான குறிப்பு..

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிடும் உங்கள் அன்பிர்க்கும் நன்றி,உமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி அக்கா ஹெல்தி கஞ்சி சூப்பரா இருக்கு அக்கா ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி,கனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹாய் முசி உங்க ஹலீம் கஞ்சி செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு