ஆண்களும் சமையலும்!!!

புதுசா ஒரு தலைப்பு புதுசா ஒரு தலைப்புன்னு எல்லாரும் கேட்டீங்க... எனக்கும் எப்படி யோசிச்சாலும் மண்டையில் ஸ்டாக் இல்லாத மாதிரியே இருந்துது. இப்ப எதேர்சையாக விஜய் டிவி நீயா நானா பார்க்கும் போது தான் மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சுது... துவங்கிட்டேன். ;) இங்க நீங்க பகிர்ந்துக்க வேண்டிய விஷயம்...

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?

இப்படி எதை பற்றி வேணும்னாலும் உங்க கருத்தை இங்கே பதியலாம். தமிழ் பதிவு... முடிஞ்சவரை இதை மட்டும் கடைபிடிங்க. ப்ளீஸ் :) பதிவுகளோட வாங்க... இண்ட்ரஸ்டிங்கா எதாவது கதைப்போம்.

ஆஹா ஆண்கள் தலையை ஆட்டுவிக்கும் தலைப்பா இருக்கே... விட்டுடுவேனா என்ன :)
//1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?//

கண்டிப்பா வரலாம்... வரணும். வந்து தண்ணி குடிச்சுட்டு போயிடப்படாது. கூடமாட நின்னு உதவி செய்யணும். ஆனா உதவி செய்யறேன்னு உப்புக்கு பதிலா சர்க்கரையை போடறது காய் வெட்டறேன்னு சொல்லி கன்னாபின்னான்னு கட் பண்றது, காஃபி போட்டுத்தரேன்னு சொல்லி ஷெல்ஃபில் உள்ள மொத்த பாத்திரங்களையும் சிங்குக்கு கொண்டுவரதுன்னு லொள்ளு பண்ணாம உருப்படியா உதவணும். இதெல்லாம் ஒழுங்கா பண்ணினாதான் அட்லீஸ்ட் மனைவிக்கு உடம்பு முடியலேன்னா ஒரு சாதமும் ரசமும் வச்சாவது சமாளிக்க முடியும். மனைவிமார்களே உங்க மாமியார் பையனுக்கு சமையல் கத்துக் கொடுக்கலேன்னாலும் நீங்க உட்கார வச்சு சமையல் ட்யூஷன் எடுத்துடுங்க :)

என்ன கேட்டீங்க எங்க வீட்டுல எப்படியா... தண்ணி குடிக்க கூட கிச்சன் பக்கம் வரதில்லை. எல்லாம் கையில் கொடுக்கணும் :(. எனக்கு உடம்புக்கு முடியலேன்னா இருக்கவே இருக்கு ரெஸ்ட்ரான்ட். சமைச்சு தரேன்னு சொல்லி கிச்சனை நாஸ்தி பண்ணாத வரைக்கும் எனக்கும் ஓகேதான் :)

//2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?//

கண்டிப்பா நல்ல விஷயம்தானுங்கோ. இப்பதான் பெண்களும் வேலைக்குப் போறாங்களே. எல்லா வேலையும் தனியா எப்படி சமாளிப்பாங்க. கண்டிப்பா உதவணும்.

//3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?//

ஈகோ, காலம்காலமா இருந்து வர பழக்கம் அப்படீன்னு எல்லாம் சொன்னாலும் சோம்பேறித்தனம்தான் முக்கிய காரணம் :). இன்னொருகாரணம் சமையல் வேலையை தன் தலையில் கட்டிடுவாங்களோங்கற பயம். பொதுவா நம்ம வீட்டில் ஆண்கள் செய்யும் ஏதாவது ஒரு வேலையை ஒரே ஒரு தடவை ஆண்களை எதிர் பாராம பெண்கள் செய்துட்டாங்கன்னு வைங்க.... அம்புட்டுதான் அப்புறம் காலாகாலத்துக்கும் பெண்கள்தான் அந்த வேலையை செய்யணும். நம்ம தலையில கட்டிடுவாங்க. அதே மாதிரி ஆண்கள் தனக்கும் நடந்துடுமோன்னு பயப்படறாங்க. தன் வினை தன்னைச்சுடும்னு சின்ன வயசுல படிச்சிருக்காங்களே :)

//4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?//

சமையல்னு இல்லீங்க எதுவுமே இஷ்டப்பட்டு செய்தா கஷ்டமே இல்லீங்க :)

//5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?//

காண்டாயிடுவோம்ல. அப்புறம் ஜென்மத்துக்கும் அந்த ஐட்டம் மீண்டும் எங்க கிச்சனில் சமைக்கவே மாட்டோம்ல :). இது தெரிஞ்சுதானோ என்னவோ ரொம்ப குறை சொல்றது இல்லை.
//6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?//

டெய்லி தனியாத்தானே சமைக்கிறேன் ரெண்டு பேருக்கு :). நிறைய பேருக்கு தனியா சமைத்த அனுபவம் இல்லீங்கோ. அதிகபட்சம் ஒரே ஒரு வேளை உணவு 10பேருக்கு சமைச்சிருக்கேன். நிச்சயம் வீட்டில் உதவ யாராச்சும் இருப்பாங்க. இல்லைன்னா வெளியில் ஆர்டர் பண்ணிடுவோம். இந்த விஷயத்தில் தலைவரு ரொம்ப நல்லவரு... தனியா சமைத்து கஷ்டப்படாதே வெளியே வாங்கிடுவோம்னு சொல்லிடுவார் :)

//7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?//

அட நல்லாத்தான் இருக்கும். சந்தோஷமாத் தோணும் :). ஆனா அந்த உதவி எங்க வீட்டுல கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். அதான் எனக்கு முடியலேன்னா வெளியில் வாங்கிடறாரே. அது கூட உதவிதானே. சந்தோஷம்தான். இதுக்கும் மேல ஆசை படப்படாதுன்னு திருப்தி பட்டுக்கறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இன்னைக்கு ப்ரோக்ராமில் கூட பலரும் இதை தான் சொன்னாங்க... ஒரு முறை சமைச்சா மனைவி அதையே எதிர்பார்ப்பாங்க, மதிக்க மாட்டாங்கன்னு ;)

ஆனா கர்ப்பமா இருந்து தனியா இருக்கீங்கன்னா அவரை விட்டா வேறு யாரும் உங்களுக்கு செய்ய இயலாதே... சொல்லிக்கொடுங்க. ஆல் தி பெஸ்ட். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... வாங்க வாங்க. 3ஆவது பாயிண்ட்... சூப்பரு. ;) இதை தான் டிவியிலும் சொன்னாங்க. ரொம்ப ஈகோ... ஏன் அப்படி இருக்காங்க? இதை செய்தா ஏன் மட்டமா நினைக்கிறாங்க? எனக்கு அது தான் புரியல.

//இதில வரும் டயலாக் வேற குறை சொல்லும்போது தானே நாளைக்கு இதவிட நல்லா வரும்ன்னு// - ஹஹஹ்ஹா. சூப்பரு... இதையே தான் நானும் அடிக்கடி கேட்கறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம்ம் கண்டிப்பா சொல்லி கொடுக்கிறேன்....ஆனால் அவருக்கு நக்கல் வேற....சொல்லுறார் உனக்கு சமைக்கத்தானே வேனும்....ம்ம்ம்ம் இரு சமைக்கிறேன்.... நீ மட்டும் சாப்பிடாட்டித்தான் இருக்கு என்கிறார்..... அவருக்கு பொறுமையுமில்லை.... பட் நீங்க எல்லரும் சொல்லீட்டீங்க இல்ல..... ம்ம்ம்ம் அவர விடப்போறதா இல்ல.....

உண்மை உண்மை... மனைவிக்கு உதவுவது அம்மாக்கு கூட பிடிக்காதுன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. அங்கையே அப்படின்னா வெளிஆட்கள் பற்றி கேட்கவே வேண்டாம். நம்ம ஊரும் அப்படி தானே... கொஞம் அடுப்படியில் ஹெல்ப் பண்றவர்ன்னு சொன்னா “இன்னைக்கு சமையல் யாரு??”னு கிண்டலா கேட்டு ஹர்ட் பண்ணுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai vanitha mam.. how r u? இந்த topic எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... எல்லா பெண்களுக்கும் தன் கணவர் தனக்கு ஹெல்ப் பண்ணணும் தான் ஆசைபடுவாங்க... அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.. என் கணவர் எனக்கு எல்லா வகையிலும் ஹெல்ப் பண்ணுவாங்க.. எல்லா பெண்களோட கணவரும் தன் மனைவியின் கஸ்டங்களை புரிந்து கொண்டு ஹெல்ப் பண்ணணும்.....

allah is great

//1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?//

கண்டிப்பா வரணும்.
ஆனா எங்க வீட்ல வந்து தண்ணி குடிச்சுட்டு போயிடுவாங்க.அதுவும் ஒரு வருடமாதான் (கல்யாணமாகி 23 வருடமாச்சி) இவருதான் இப்படியாச்சே! பிள்ளையையாவது ஆரம்பத்துலேர்ந்து கொண்டு வரலாம்னா ஒவ்வொன்றுக்கும் பிள்ளையாண்டானின் பதில் "அப்பா மட்டும்". அப்பாவின் reaction "அதானே" "அம்மாதான் கொண்டு வரணும்"

//2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?//

கண்டிப்பா உதவணும்.
ஆனா எங்க வீட்ல "உன்னால் முடிஞ்சவரை செய். முடியலன்னா வாங்கிக்கலாம்" என்ற dialogue தான். ம்ம்ம்.... இது எப்டி இருக்கு.

//3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?//

ஈகோவான்னு தெரியல்ல. சமையல் என்பது பெண்களின் வேலை என்பது என் கணவரின் எண்ணம்

//4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?//

எனக்கே அது கஷ்டந்தான். அப்ப நான் அவங்கள என்ன சொல்ல

//5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?//

கஷ்டமாயிருக்கும் (ஏன்னா என் சமையல் சமைக்கிற எனக்கே கொஞ்சம் சகிக்க கஷ்டந்தேன்) இருந்தாலும் இப்பொ கொஞ்சம் adjust பண்ணிக்கிட்டார். வேறு வழி?
//6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?//

அதிகபட்சம் ஒரு 10 நாட்கள் 6 பேருக்கு தனியா சமைச்சிருக்கேன். மற்றபடி அதிக அனுபவம் இல்ல

தினமும் தனியாத்தான் சமைக்கிறேன் நாலு பேருக்கு (என் 2 பிள்ளைகளையும் சேர்த்து) இதுக்கே தினமும் தரிகிடதோம்.

//7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?//

நல்லாத்தான் இருக்கும் அப்படி ஒன்று நடந்தா. (ஆனா இதுவரை 2 அல்லது 3 முறை சிக்கன் சமச்சிருக்கார் அவரா விரும்பி. நான் சொல்லி இதுவரை ...ம் ஃஹ்ம்)

நான் இதுல எதுவும் செய்யமுடியவில்லை. ஏன்னா...படிக்கவும் 2-வது point-ஐ மறுபடி.

அன்புடன்
ஜெயா

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

கண்டிப்பா வரணும். நாமளும் காலைல இருந்து ஆஃபிஸ்ல வேலை பாத்துட்டு தானே வாறோம். எங்க தலைவர் மூட் இருந்தா வேலை பாப்பாப்ள. சமையல் ல அவ்வளவா இண்டரெஸ்ட் இல்லாட்டியும், கடைக்கு போயிட்டு வறது, தேங்கா ஒடைச்சி தர்ரது, வீட்ட பெருக்கறதுனு எதாதும் செஞ்சு குடுப்பார். காலைல அவசரமா ஆஃபிஸ்கு கெளம்பிட்டு இருக்கும் போது(அவர் அஞ்சு நிமிசத்த்தில கெளம்பிடுவார், எனக்கு தான் மணிகணக்கா ஆகும் :-)), ப்ரேக்ஃபாஸ்ட் தோசைனா அவரே தோசை சுட்டு நா கெளம்பிட்டு இருக்கும் போதே ஊட்டி விற்றுவார்.இது ஏதோ பாசத்திலனு நெனச்சிரதீங்க, நா சாப்டு முடிக்க ஒரு 15 நிமிஷம் ஆகும். அதா இந்த ஏற்பாடு. :-)

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

கண்டிப்பா நல்ல விஷயம் தான். சமைக்கும் போது சின்ன சின்ன உதவிகள் செஞ்சா வேலையும் சீக்கிரம் முடியும்.

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

என்னோட நண்பர்கள் அடிக்கடி சொல்றது, ஒரு நாள் சமைச்சு குடுத்த அப்பறம் அதுவே பழக்கம் ஆயிடும்னு ஹெல்ப் பண்றதே இல்லனு. அப்பறம் நல்ல சமைக்க தெரிஞ்சாலும் அத சொல்லிக்காரதே இல்லயாமா.

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?
எனக்கு இண்டெரெஸ்டிங்கா இருக்கறப்ப ஈசியா ஃபீல் பண்ணுவேன். ஆனா நெறைய பேருக்கு தனியா சமைக்கணும்னா கொஞ்சம் கஷ்டமா தா இருக்கும். அதுவும் எல்லாம் சமைச்ச அப்பறம் பாத்திரம் கழுவும் போது. அப்பறம் சில சமயம் ஏதாவது செஞ்சு நல்ல இல்லனா கஷ்டமாதான் இருக்கும்.

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

செம கடுப்பா இருக்கும். என்னோட ஆஃபிஸ் ஃபிரண்ட்ஸ் இல்ல வீட்டுக்காரரோட ஆஃபிஸ் ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு வருவாங்க. வீக் எண்ட் ல வரமுடியாதுனு வீக் டேஸ்ல தா வருவாங்க. நாம ஆஃபிஸ் விட்டு வந்து அரக்க பறக்க செஞ்சு குடுத்த சரியவே சாப்ட மாட்டாங்க. கெட்டா, லேட் டைம் ஆயிடிச்சில அதா நெறயாவே சாப்டமுடியலான்னுவாங்க.

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

ஒரு 15 பேருக்கு.

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?

நல்ல தான் இருக்கு. ஆனா அவங்க எத செஞ்சாலும் கரெக்ட்டா செய்யயல னு தான் தோணும். கடைசில உங்க கிட்ட வேலை சொல்றதுக்கு நானே செஞ்சிருக்கலாம்னு நா சொல்ல, செஞ்சிக்க வேண்டியது தானே னு அவரு சொல்ல, சண்டையில தா முடியிது!

ஆனா கல்யாணதுக்கு முன்னாடி நா ஹாஸ்டல்லருந்தேன். சாப்பாடு சரி இல்லனு அவரே சமச்சு எக் நூடல்ஸ்(மாகி தான்!), சிக்கன் வறுவல் னு செஞ்சு சைக்கில 2 கிமீ வந்து குடுத்துட்டு போவரு. நமக்காக இவ்ளோ தூரம் பண்றாறேனு ரொம்ப சந்தோஷமா இருக்கும். என் ரூம் மேட்ஸ் எல்லாம் நீ ரொம்ப லக்கி னு சொல்லிட்டு, எல்லாத்தாயும் காலி பண்ணிடுவாங்க.

வாங்கோ வாங்கோ... நேற்றே படிச்சேன், ஆனா பதிவு போட முடியாம மட்டன் என்னை இழுத்துட்டு போயிட்டு ;) அந்த கதையை அப்பறமா சொல்றேன்.

// மனைவிமார்களே உங்க மாமியார் பையனுக்கு சமையல் கத்துக் கொடுக்கலேன்னாலும் நீங்க உட்கார வச்சு சமையல் ட்யூஷன் எடுத்துடுங்க :)// - முடியலயாமே கவிசிவா... நம்மகிட்ட சிக்க மாட்டங்கறாங்கன்னு எல்லாரும் கம்ப்ளைண்ட் பண்றாங்கோ... சரி உங்க வீட்டுல எதாவது கத்துகிட்டாரா??? :P

// இப்பதான் பெண்களும் வேலைக்குப் போறாங்களே. எல்லா வேலையும் தனியா எப்படி சமாளிப்பாங்க.// - அப்போ நம்மை மாதிரி வேலைக்கு போகலன்னா??? விட்டுடலாமா?? 3:) கடிச்சுவெச்சுடுவேன்.

காரணம் சொன்னீங்க பாருங்க... ரொம்ப ட்ரு. :( ஒரு முறை இவர் வேலையா இருக்காருன்னு இங்க வந்து சேர்ந்த பேக்கேஜ் எல்லாம் தனியா நகர்த்தி வெச்சேன். இப்போ நீயே சுலபமா செய்துருவியே...ன்னு சொல்லி என்னையே செய்ய வைக்கிறார். டூ பேட்.

// அப்புறம் ஜென்மத்துக்கும் அந்த ஐட்டம் மீண்டும் எங்க கிச்சனில் சமைக்கவே மாட்டோம்ல// - ஹஹஹா. டிட்டோ... நானும் அதை தான் செய்வேன் ;) அப்பறம் நீ அதை செய்து ரொம்ப காலமாகுதேன்னு கெஞ்ச விட்டுருவேன்.

தொடருங்க கவிசிவா... இன்னும் நிறைய அனுபவங்களை சொல்லுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா... அது நக்கல் இல்ல.. மிரட்டல் ;) உஷாரா இருங்கோ. முடிஞ்சா அவர் சமைச்சதை முதல்ல அவரையே சாப்பிட வெச்சு பார்த்துருங்கோ. ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்