ஆண்களும் சமையலும்!!! - 26478 | அறுசுவை மன்றம் - பக்கம் 4
forum image
ஆண்களும் சமையலும்!!!

புதுசா ஒரு தலைப்பு புதுசா ஒரு தலைப்புன்னு எல்லாரும் கேட்டீங்க... எனக்கும் எப்படி யோசிச்சாலும் மண்டையில் ஸ்டாக் இல்லாத மாதிரியே இருந்துது. இப்ப எதேர்சையாக விஜய் டிவி நீயா நானா பார்க்கும் போது தான் மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சுது... துவங்கிட்டேன். ;) இங்க நீங்க பகிர்ந்துக்க வேண்டிய விஷயம்...

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?

இப்படி எதை பற்றி வேணும்னாலும் உங்க கருத்தை இங்கே பதியலாம். தமிழ் பதிவு... முடிஞ்சவரை இதை மட்டும் கடைபிடிங்க. ப்ளீஸ் :) பதிவுகளோட வாங்க... இண்ட்ரஸ்டிங்கா எதாவது கதைப்போம்.


நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும்

நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

ஒரு விதத்தில நான் குடுத்து வைச்சவ.... என்ன சமைத்தாலும் குறை சொல்லவேமாட்டார்.... சமத்தா சாப்பிட்டு போய்டுவார்.... என்னால் முடியாட்டி எல்லா ஆண்களைப்போலவும் வெளீல போய் சப்பிடலாம் என்பார்... சமையல்ல மட்டுமில்லைங்க வீட்டு வேலைகளிலும் தான்....உண்னால முடியாட்டி சொல்லு ஒரு வேலைக்காரி எடுத்திடலாம் என்பார்.

ஒரு பொண்னுக்கு வாழ் நாள் முழுவதும் சிரமம் இருக்காது....அப்பப்போதான் இருக்கும்....அதுவும் மாதவிலக்கு மாசமா இருக்கிற சந்தர்ப்பம் விருந்தினர் வரும் சந்தர்ப்பம் விஷேஷம் போன்ற நேரங்களில் தனியே செய்றது ரொம்ப கஷ்டம்....அவங்களும் கொஞ்சம் பழகியிருந்தால் மரக்கறி கட் பன்றது மேசை அரேஞ் பன்றது என்று சிறிய உதவிகளை செய்யப்பழகியிருக்கலாம்.
அவங்களுக்கு சூடா நாம தோசை வார்த்து கொடுக்கிறோம் ஆனால் நாம சூடா சாப்பிட முடீதா??? மிஞ்சி மிஞ்சி போனா நாம 4 தோசை சாப்பிட்டோமில்ல....அவங்க எங்களுக்கு வார்த்துத்தந்தால் நாமளும் சூடா சாப்பிடுவோமில்ல....ஒரு தடவை அவர் எனக்கு உதவி செய்றன் என்று உருளைக்கிழங்கு சிப்ஸ்க்கு கட் பண்ணுறன் என்று பெரிது பெரிதா கட் பண்ணி அது எனக்கு இன்னொரு வேலையா போச்சு....

அவங்க ஏன் உதவி செய்ய பயபடுறாங்க என்று நேரில் சொன்னாலாவது நாம அதுக்கு ஏத்தமாதிரி கதைச்சுப்பார்க்கலாம்.... அவங்க வேணுமென்றால் கணிப்பாவும் சொல்லலாம்... உனக்கும் எப்போ ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டமோ அப்போ மட்டும் சொல்லு.... நான் செய்றேன் என்று..... அதுவும் சொல்ல மட்டாங்க.... இது எனக்கு ஒரு குறையாக தெரியாது...ஏனெனில் மத்த்படி ரொம்ப நல்லாத்தான் இருப்பார் என்னுடன்.... எப்போ எனக்கு ரொம்ப முடியாம இருக்குதோ அப்போ ரொம்ப ஏக்கமா இருக்கும்... அவர் என்ன செய்தாலும் செய்யாட்டியும் அவர் எனக்கு கடவுள் தான்....

சூப்பர் தலைப்பு

வனிதா மேடம், சூப்பர் தலைப்பு. என் அனுபவத்தையும் சொல்ல வந்துட்டேன்.
1. கண்டிப்பா வரணும். அதுவும் 2 பேரும் வேலைக்கு போறவங்கன்னா கண்டிப்பா வரணும். எங்க வீட்ல கொஞ்சம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாங்க. ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்னு சொன்னா அப்புறம் சாமி என் கண்ண குத்திடும். :)
2. நல்ல விஷயம் தாங்க (பெண்களுக்கு. அவங்களுக்கு எப்டி நு தெரியல :))
3. ஈகோ & அவங்க வளர்ப்பு முறை. எங்க மாமியார் வீட்ல அந்த பிரச்சனையே இல்ல. எல்லாரும் எல்லா வேலையும் செய்வாங்க. எங்க மாமியார் உடம்பு சரில்லாம இருந்தப்ப எல்லாரும் செஞ்சு பழகிட்டாங்க. இப்ப என் மாமியார் இல்ல. நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன். எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க. நான் அவங்கள பாத்தது இல்ல. :( பட் அவங்களுக்கு தான் நன்றி சொல்லணும். இவர் அவங்க அம்மா மாறி என்னையும் நல்லா பாத்துப்பாங்க.
4. நல்லா சமைக்க தெரிஞ்சவங்களுக்கு ஈசி இல்லைன்னா ரொம்ப கஷ்டம். எனக்கு நான் ரொம்ப நல்ல மூட் ல இருந்தேன்னா நல்லா செய்வேன். ரொம்ப tired ஆ இருந்தேன்னா கொஞ்சம் கஷ்டம்.
5. ரொம்ப கோவமா வரும். அதுவும் எங்க அம்மா வோட compare பண்ணி குறை சொல்லும்போது ரொம்ம்ம்ம்ப கோவம் வரும். எனக்கு இவ்ளோ தான் செய்யதெரியும் நு சொல்லிடுவேன். அப்புறம் நான் சாப்பிடும்போது அதுல என்ன குறை னு பாத்து next டைம் கொஞ்சம் நல்லா செய்ய ட்ரை பண்ணுவேன்.
6. ரொம்ப ஒண்ணும் இல்லீங்க. ஒரு 6,7 பேத்துக்கு செஞ்சுருக்கேன் அவ்ளோ தான். :)
7. ரொம்ப ஹாப்பி எ இருக்கும். நாம ரொம்ப gifted னு தோணும். நைட் வீட்டுக்கு வரும்போது ரொம்ப tired எ இருந்தா அவரே தோசை ஊத்தி குடுப்பாரு. ஆனா ஹெல்ப் பண்றேன்னு நமக்கு நெறைய வேலையும் வச்சுடுவார் sometimes. உங்ககிட்ட சொன்னதுக்கு நானே செஞ்சுருக்கலாம் னு அப்ப தான் சண்ட வரும். :)

வனிதா அக்கா

வனிதா அக்கா, நா ஒரு அஞ்சு வருஷமா அறுசுவைக்கு வந்து போயிட்டு இருக்கேன். உங்க பதிவுகள் நெறைய படிச்சிருக்கேன்.உங்க சமையல் குறிப்புல பாம்பே அல்வா, பனீர் டிக்கா, தக்காளி சாதம் லா செஞ்சு பாத்திருக்கேன். தென்னிந்திய, வடக்கிந்திய டிஷ், இன்டர்நேஷனல் டிஷ், குழந்தைகளுக்கு டிஷ், பார்ட்டி ஐடியா, மெனு, மெகந்தி, நெயில் ஆர்ட், கைவினை பொருட்கள், கதை னு எல்லா ஏரியாலயும் கலக்கறீங்க. நீங்க ஒரு ஆல் இன் ஆல் அழகு ராணி தான். உங்க கூட பேச வாய்ப்பு கிடைக்கல இது வரைக்கும். உங்களுக்கு என் பதிவு பிடிச்சது ரொம்ப சந்தோஷம். நா இதுவரைக்கும் ஒரு ரெண்டு மூணு பதிவு தான் போட்ருப்பேன். உங்க எங்கரேஜ்மெண்ட் கு ரொம்ப நன்றி.

//குட். ஏங்க அதை சீக்கிரம் சாப்பிட வைக்கன்னு சொல்லிபுட்டீங்க... பாசந்தேன். நம்புங்க ;) எனக்கு எங்க அப்பா செய்வார்... ஸ்கூல் அனுப்ப. இப்ப இவரும் அவர் பிள்ளைகளுக்கு தான் பண்றார் ;) நம்ம வேலைக்குலம் போகலீங்க.. போனா பண்றாரா இல்லையான்னு தெரியும் :P// பாசந்தேன். என்ன கெளப்பி ஆஃபிஸ் ல விட்டுட்டு அவர் ஆஃபிஸ் போறதுக்குள்ள ஒரு அரை மணி நேரமாவது லேட் ஆகிரும், பாவம். சாயந்திரம் வந்து சொல்லுவாரு, நாளைக்காவது சீக்கிரம் கெளம்புனு, நா சொல்லுவேன், இப்பவே ட்ரைனிங் எடுத்துக்கப்பா, ஃப்யூச்சர் ல புள்ளயயும் என்னையும் சேத்து கெளப்பி அனுப்ப வேண்டிஇருக்கும் னு :-) வேலைக்கு போகலா னா என்னக்கா? ஆக்ச்சுவலி ஆஃபிஸ் அ விட வீட்ல தா வேலை அதிகம். நா லா ஆஃபிஸ் போறேன் ஆஃபிஸ் போறேனு வீட்டு வேலைல ஒபி அடிச்சிக்கிட்டு இருக்கேன். :-)

//எனக்கு பிடிச்சதை சமைக்க சொன்னா எனக்கு ஈஸியா இருக்கும் ;) பிடிக்காததை கட்டாயமா சமைக்க சொன்னா... அம்புட்டு தான்.// டெய்லி என்ன செய்யட்டும் கேட்ட, என்ன வேணா செய்யினு தா பதில் வரும். ஆனா செய்யறதென்னவோ அதே தோசை தான்....

//இப்ப ரீசண்ட்டா நான் டீயை குறை சொன்னேன்.. எனக்கு அதன் பின் டீயே கிடைக்கல// போன வாரத்தில ஒரு நாள் சாம்பார் ல உப்பு ஜாஸ்தியாகிடிச்சு. சமைக்கும் போதே பசிக்கிது பசிக்கிது னு ஒரே பாட்டு. சரி னு டேஸ்ட் பண்ணி பக்கமா கொண்டு போயி குடுத்துட்டேன். அப்பறம் நா வேலை எல்லாம் முடிச்சிட்டு சாப்புட ஆறமிக்கும் போது தா தெரிஞ்சிது. நானும் ஒரு வாயி சாப்புடறேன், தண்ணி குடிக்கறேன். தலைவர் மறுபடியும் சாம்பார் ஊத்திக்க போனாப்ப்ள. நா அய்யய்யோ வேணாம் உப்பு ஜாஸ்திய இருக்கு னு சொன்ன வோடனே சொல்லறரு, அப்பாடா கண்டு புடிச்சிட்டியா, நா சொன்ன திட்டுவனு இவ்ளோ நேரம் சொல்லல. மொதல இந்த சாம்பார் எடுத்துட்டு போயி உள்ள வையி னு சொல்லி சிரிச்சாரு. :-)

எனக்கு உதவி பண்ணலனாலும் பரவாயில்ல, நாம அரக்க பறக்க சமைக்கும் போது ஹால் ல ஹாயா சேர்ல கால் மேல கால் போட்டுகிட்டு NDTV பிசினஸ் நியூஸ் பாக்கறத பாத்தா எனக்கு செம காண்டாயிரும்....

ஜாலியான தலைப்பு :)

வனி எல்லோரையும் சுண்டி இழுக்கும் தலைப்பை போட்டு அசத்திட்டிங்க :)

//1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?//

வந்தே ஆகனும் இதுல கேள்வியே கிடையாது நமக்கு எந்த வகையிலாவது உதவி செய்தா நமக்கு நல்லதுதானே வேலையும் சீக்கிரம் முடியும் அதோட வேலையோட அலுப்பும் தெரியாது
செய்யும் வேலையை ஒழுங்கா செய்துதரனும் சும்மா பேருக்கு வந்து இன்னும் வேலையை இழுத்துவிட்டுட்டு போககூடாது
(எங்கவீட்டுக்காரர் நல்லா ஹெல்ப் பன்னுவார் நான் பூரி தேய்ச்சா பொரிச்சு எடுப்பார்,காய் நறுக்கி தருவார் இன்னும் நிறைய இருக்கு லிஸ்ட் ;) )
உடம்பு சரியில்லைன்னா எல்லாமே அவரே பாத்துப்பார் நமக்கு எல்லாம் கையில கிடைக்கும்

//2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?//

கண்டிப்பா நல்ல விஷயம்தான் வேலைக்கு போகும் பெண்கள் மட்டும் இல்லை வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் அது நல்லதே
நாம ஊருக்கு போனாகூட தைரியமா கிளம்பி போகலாமே

//3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?//

1,அவங்க செய்து நல்லா வந்துட்டா அதையே வழக்கமா செய்யவச்சுடுவோமோ என்ற பயம்
2,ஆண்களுக்கே உண்டான ஒரு நினைப்பு என்னன்னா சமைக்கிறது என்பது பெண்களுக்கே உரிய வேலைன்னு நினைக்கிரது இதனாலயும் அடுப்படி பக்கம் வரதில்ல

//4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?//

சமையல் கற்றுக்கொள்ளும் வரை கஷ்டம் கற்றுக்கொண்டபின் சுலபம் ;)

//5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?//

எப்படி இருக்குமா அப்ப வரும் பாருங்க ஒரு கோவம் அந்த கோவத்துக்கு அளவே சொல்லமுடியாது

//6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?//

இதுவரை 15 பேருக்கு தனியா சமைச்சிருக்கேன் யார் உதவியும் இல்லாமல்

//7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?//

கரும்பு தின்ன கசக்குமா என்ன ரொம்ப சந்தோசமா இருக்கும்
எங்க வீட்டுல என்னலாம் செய்து கொடுத்திருக்கார்னு சொல்றேன் கேளுங்க
இட்லி,தோசை,சட்னி,தக்காளி சாதம்,புளிக்குழம்பு,ஆம்லெட்,இன்னும் லிஸ்ட் நிறைய இருக்கு.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Hi Thozhli

s s s

புவனா

ஹிஹிஹீ. எதுக்கு பயம்??? நாங்க ஒன்னும் பண்ண மாட்டோமாக்கும் ;) தைரியமா வாங்க இனி பட்டிமன்றத்துல. சரியா?

சீக்கிரம் வாங்க... உங்க பதிவுக்காக காத்திருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன சமையலோ

அன்பு வனிதா,

நல்ல தலைப்பைக் கொடுத்து, பாயிண்ட்ஸும் எழுதறதுக்கு வசதியாக, கேள்விகள் கொடுத்திருக்கீங்க. இதோ வந்தூட்டேன்...

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

கண்டிப்பாக வந்துதான் ஆகணும். சின்ன சின்ன உதவியிலிருந்து, முழு சமையல் செய்யறது வரை அவங்களும் கை கொடுக்கணும்.

முக்கியமாக, இரண்டு பேரும் வேலைக்குப் போறவங்களாக இருக்கும்போது, சாயங்காலம் அலுத்து, சலித்து, வர்றப்ப, ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்கக் கூட, தெம்பில்லை.

காலையில், கணவரும் நம்ம கூட அடுப்படியில் நின்னுகிட்டு இருந்தார்னா, நம்ம சட்னி அரைக்கறதோட, மத்த விஷயங்களும் பேசலாமே.(உறவினர்களின் தலையை உருட்டுறதை சொல்லலை) கரண்ட் பில் என்னிக்கு கட்டணும், ஃபோன் பில் கட்டியாச்சா, இப்படி டிஸ்கஸ் பண்ணலாம்.

பேசிகிட்டே உப்புப் போட மறந்தாலோ, அல்லது ரெண்டு தடவை உப்பு, மிளகாப் பொடி போட்டீங்கன்னா, நான் பொறுப்பில்லப்பா:):)

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

ரொம்ப நல்ல விஷயங்க இது. ஒரு மாரல் சப்போர்ட் கிடைக்குது. அவங்களும் கத்துக்க முடியுமே.
3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

எனக்கு என்ன தோணுதுன்னா, நிறைய பெண்களே - ‘இது எங்க ஏரியா, உள்ள வராதீங்க’ன்னு சொல்றாங்களோன்னு தோணுது. அதுவுமில்லாம, கண்டிப்பாக சொந்தக்காரங்க கேலி பண்ணுவாங்க என்ற பயம் இருக்கும்.

சில பேருக்கு தானே வேலை செய்தால்தான் பிடிக்கும். கணவருக்கு சொல்லிக் கொடுத்து, அதுக்கு டைம் ஆகுற நேரத்துல நாமே செய்துடலாமேன்னு தோணுதோ என்னவோ.

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?

சுலபம்தாங்க. அதுவுமில்லாம விக்கிற விலைவாசில நாமே செய்துக்கறதுதான் பர்ஸுக்கும், நம்ம உடம்புக்கும் நல்லது. அவசியமானதுன்னு ஆனதுக்கப்புறம் கஷ்டம்ங்கற வார்த்தைக்கே இடம் ஏது?

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

பொதுவாக இதுவரைக்கும் நிஜமான விமரிசனம்தான் கிடைச்சிருக்கு. அவங்க சொல்லுமுன்னாலயே என்ன சொதப்பினேன்னு எனக்கே தெரிஞ்சிரும். அதனால கொஞ்சம் மனசு வருத்தமாகத்தான் இருக்கும்.(இப்படி ஆகிடுச்சேன்னு)
6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

15 பேர் வரைக்கும் செய்துடுவேன். முதலிலேயே மெனு தயாரிச்சிடுவேன். எந்த வேலை முதல்ல செய்யணும், அப்படின்னு மனசுக்குள்ள ஒரு படம் ஓட்டிப் பாத்துடுவேன். செய்ய செய்ய, சரி பாத்துக்குவேன்.(சாதம் வச்சாச்சு, ஓ.கே, கலப் பருப்பு எடுத்து வச்சாச்சு, ம், அடுத்து அவியலுக்கு காய் வேகுது, அதுக்குள்ள அரைக்கறதெல்லாம் ரெடி பண்ணிடலாம் .. இப்படி செக் பண்ணிக்குவேன்)

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இருக்குது.

அன்புடன்

சீதாலஷ்மி

லலிதா

//என்ன சமைத்தாலும் குறை சொல்லவேமாட்டார்.... சமத்தா சாப்பிட்டு போய்டுவார்.... // - கொடுத்து வெச்ச மகராசி ;)

//அவங்களும் கொஞ்சம் பழகியிருந்தால் மரக்கறி கட் பன்றது மேசை அரேஞ் பன்றது என்று சிறிய உதவிகளை செய்யப்பழகியிருக்கலாம்.// - உண்மை தான் விஷேஷ நாள், விருந்தினர் வருகைன்னா வேலை அதிகம், யாராவது இதையாவது செய்து கொடுக்க கூடாதுன்னு மனசு தவிக்கும்.

//அவங்களுக்கு சூடா நாம தோசை வார்த்து கொடுக்கிறோம் ஆனால் நாம சூடா சாப்பிட முடீதா??? மிஞ்சி மிஞ்சி போனா நாம 4 தோசை சாப்பிட்டோமில்ல....அவங்க எங்களுக்கு வார்த்துத்தந்தால் நாமளும் சூடா சாப்பிடுவோமில்ல....// - சத்தியமா இதை நான் பல முறை நினைச்சிருக்கேன் :P சில நேரம் கேட்டு செய்து கொடுக்கவும் சொல்வேன். செய்வார். :)

//அவர் என்ன செய்தாலும் செய்யாட்டியும் அவர் எனக்கு கடவுள் தான்....// - ஆஹா.... !!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரஞ்சினி

வாங்க வாங்க :)

//ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்னு சொன்னா அப்புறம் சாமி என் கண்ண குத்திடும். :)// - ஹஹஹா ;) குத்தாது குத்தாது... பயப்படாதீங்க.

//ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்னு சொன்னா அப்புறம் சாமி என் கண்ண குத்திடும். :)// - வேற என்ன வேணும்... இது போதாதா? :) லக்கி தான். சுத்திப்போடுங்க.

//ஆனா ஹெல்ப் பண்றேன்னு நமக்கு நெறைய வேலையும் வச்சுடுவார் sometimes. உங்ககிட்ட சொன்னதுக்கு நானே செஞ்சுருக்கலாம் னு அப்ப தான் சண்ட வரும். :)// - ஆனாலும் உள்ளுக்குள்ள பூரிச்சு போயிருப்பீங்க தானே ;) அப்படியே உலகத்துல நீங்க தான் ராணின்னு தோணி இருக்குமே.

இன்னும் சொல்லுங்க...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதுவும் நம்ம வீடில இட்லின்னா

அதுவும் நம்ம வீடில இட்லின்னா மட்டும் தான் ரெண்டு பேரும் சேர்ந்து உக்காந்து சாப்பிடுவோம்... அதிலையும் பருங்க நான் சப்பிடுவதில ரொம்ப ஸ்லோ....அவர் ரொம்ப பாஸ்ட்.... சாப்பிட்டதும் இன்னொரு இட்லி கொண்டு வா என்ரு சொல்லும்போது மனசுக்குள்ள தோனும் என்னப்பா இது எழும்பி எடுக்க கூட ஏலாம இருக்க்தா என்று நினைப்பேன்..ஏன்னா இட்லி சூடா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்... ஆனால் அவர் அப்பாவியா கேக்கும்போது மனசு கொஞ்சம் உருகிடும்.... எழும்பி எடுங்களேன் என்று கேட்டாலும் பொண்டாட்டி கையால பரிமாரினால் தானே சந்தோசம் என்பார்.... என்ன பண்றது எல்லா பொண்ணுங்களுக்கும் முதல் குழந்தை அவ கணவன் தானே.....