ஆண்களும் சமையலும்!!!

புதுசா ஒரு தலைப்பு புதுசா ஒரு தலைப்புன்னு எல்லாரும் கேட்டீங்க... எனக்கும் எப்படி யோசிச்சாலும் மண்டையில் ஸ்டாக் இல்லாத மாதிரியே இருந்துது. இப்ப எதேர்சையாக விஜய் டிவி நீயா நானா பார்க்கும் போது தான் மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சுது... துவங்கிட்டேன். ;) இங்க நீங்க பகிர்ந்துக்க வேண்டிய விஷயம்...

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?

இப்படி எதை பற்றி வேணும்னாலும் உங்க கருத்தை இங்கே பதியலாம். தமிழ் பதிவு... முடிஞ்சவரை இதை மட்டும் கடைபிடிங்க. ப்ளீஸ் :) பதிவுகளோட வாங்க... இண்ட்ரஸ்டிங்கா எதாவது கதைப்போம்.

கல்யாணம் ஆன பின்னும் இதையே சொல்லனும்... ஓக்கே??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா வருவதே சுவாரஸ்யம் தானே ;)

//வரணும்// - டீச்சரம்மா இப்படி சொன்னா எல்லாரும் வந்து தானே ஆகனும் ;)

//அப்பாவும் சமைப்பாங்க. க்றிஸ் & அலன் நல்ல சமையற்காரர்.
அருண் தனக்குத் தேவையானதை சமைக்கத் தெரிந்தவர்.// - எல்லாம் இமா ட்ரெய்னிங்கா??? சூப்பரு.

// 1. நான் கஷ்டப்படுறது இல்லை. 2 குறை கேட்பது இல்லை. சமைக்கும் போதே அபிப்பிராயம் கேட்டுருவேனே. ;) உப்பு புளி பார்க்க வைச்சா பிறகு சரியில்லாட்டா கூட அவங்க மேலதானே தப்பு. ;)// - ஹஹஹா. இப்ப நானும் இதை தான் பண்றேன் இமா... உப்பு காரம் சரி பார்க்க சொல்றது... பின்னே குறை சொல்ல முடியுறதில்லை.

// அதைத் தவிர்த்துப் பார்த்தால் என் உயரத்துக்கு பிட்டு, இடியப்பம், ப்ரஷர் குக்கிங் எல்லாம் சரிவரல.// - ஆஹா!!! இப்படிலாம் கூட எச்கேப் ஆகலாமா??? ;)

சூப்பரு இமா... இம்புட்டு உதவி அனேகமா இங்க பேசின யாருக்கும் கிடைச்சிருக்காது :) இன்னும் சொல்லுங்க. அந்த வேலையெல்லாம் நாங்களும் இவங்களை வீட்டுல செய்ய சொல்றோம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படி போடுங்க... கல்யாணம் ஆனா என்ன ஆகலன்னா என்ன... கருத்து ஒன்னு தானே எப்பவும் ;)

//அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாவா போகுது சமைப்பது ஆணா பெண்ணான்னு :))
யார் மூட்டினாலும் அடுப்பு எரியா தான் போகுது , அரிசியும் வேக தான் போகுது. ஆகவே ஆண்மகனும் அடுப்படிக்கு வரனும்.;)// - ஹஹஹா. முடியல சுதா முடியல... :)

// அப்பா தான் சமையல் செய்வாங்க. நாங்க ஹெல்ப் பண்னுனா கூட, நானே செய்றேன்னு சொல்லி, அம்மாவ விட சூப்பரா சமைச்சு அசத்துவாரு. அம்மாவும் ரொம்ப சந்தோஷபடுவாங்க. நமக்கு பிடிச்சவங்க சந்தோஷம் தானே முக்கியம் அவங்களுக்காக இந்த மாதிரி சின்ன சின்ன ஹெல்ப் தாரளாமா செய்யலாம்.// - சூப்பர்... எங்க அப்பா சமைச்சு போட்ட காலமெல்லாம் கண்ணில் நிக்குது.

// கண்டிப்பா கல்யாணதுக்கு ஒரு இரண்டு மாசத்துக்கு முன்பாவது சமைக்க கத்துக்குவேன் ;)) நம்ம அறுசுவை-ல இருந்துட்டு சமைக்க கூட கத்துக்காமையா? கண்டிப்பா கத்துக்குவேன்.// - இப்பவே கத்துக்கங்க சுதா. நான் கல்யாணம் பண்ன பின் தான் கத்துகிட்டேன், ஆனா ரொம்ப வருத்தப்படுவேன், அம்மா அப்பாக்குலாம் இப்படி வகையா வகையா செய்து கொடுக்க முடியலயேன்னு. எப்பாவாது ஊருக்கு போனாலும், அங்க தான் வேலை பார்க்குற இங்க என் கையால சாப்பிடுன்னு அம்மா அடுப்படி பக்கம் விட மாட்டாங்க. எப்பவாது வருடத்தில் ஒரு முறை அப்பா அம்மா இங்க வந்தா தான் ஆசை கொஞ்சம் நிரைவேரும். நீங்க பின்னாடி இப்படி ஃபீல் பண்ண கூடாதில்ல ;) இப்பவே சமைச்சு அசத்துங்க.

// ப்யூச்சர்ல என் சமையலை கிண்டல் பண்ணினா கண்டிப்பா கன்னத்துல ஒரு சாட் விட வேண்டியது தான். :))// - ஆத்தி!!! பொண்ணு பார்க்க வருபவரிடம் இதை தான் முதல்ல சொல்லனும். ;)

சீக்கிரமே சமையல் கத்துகிட்டு கல்யாணமும் பண்ணிகிட்டு இங்க இருக்க மற்ற அனுபவசாளிகளோட ஐக்கியமாகிடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//எல்லாம் இமா ட்ரெய்னிங்கா???// இல்லை வனி. அப்பா சமைப்பாங்க. க்றிஸ் அவங்க வீட்லயே சமைப்பாங்க. எங்க கலியாண கேக் கூட அவங்கதான் பண்ணினாங்க. அலன் குழந்தையா இருந்த காலம் முதலே சமையல்ல உதவுவார். அப்பிடியே ஈடுபாடு வந்தாச்சு. இங்க ஸ்கூல்ல ஆண், பெண் வித்தியாசம் இல்லாம எல்லோருக்கும் கொஞ்சம் சமையல் சொல்லிக் கொடுத்துருவாங்க. அவங்க அவங்க சாப்பாடு செய்து சாப்பிடத் தெரியணும். சின்னவர் அப்படிப் பழகினார். இங்கு வந்த புதிதில் க்றிஸ் நைட் ஷிப்ஃட். எனக்கு இர்ணடு வாரங்கள் முடியாமல் இருந்த சமயம் சின்னவர்கள் ஸ்கூல் போகும் முன்னால தாங்களே ஏதாவது சமைச்சு, எனக்கும் எடுத்து வைத்து விட்டுப் போயிருப்பாங்க. அப்போது 9, 13 வயது இருவருக்கும்.

//ஆஹா!!! இப்படிலாம் கூட எச்கேப் ஆகலாமா??? ;)// ;))) ஆகலாம். கையை சுட்டுட்டு ஆடுறதுக்கு இது மேல். ;)))

//இம்புட்டு உதவி அனேகமா இங்க பேசின யாருக்கும் கிடைச்சிருக்காது :)// அமைதியா கமண்ட் போடாதவங்க யாராவது இருப்பாங்க வனி.
//இன்னும் சொல்லுங்க. அந்த வேலையெல்லாம் நாங்களும் இவங்களை வீட்டுல செய்ய சொல்றோம். ;)// ஹா! ந;ல்ல கதை இது! என்னை மாட்டி விடப் பாக்குறீங்களா உங்க ஆள்ட்ட! ;))

‍- இமா க்றிஸ்

// கையை சுட்டுட்டு ஆடுறதுக்கு இது மேல். ;)))// - இங்க கையை சுட்டுகிட்டா திட்டு வேனும்னா கிடைக்கும், ஹெல்பெல்லாம் கிடைக்காது :(

// கையை சுட்டுட்டு ஆடுறதுக்கு இது மேல். ;)))// - பெரியவங்க சொன்னாவாது கேட்பாருன்னு ஒரு நம்பிக்கை தான் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போட்டேன்... என்னமோ... ஒரு ஆளை நினைச்சேன்... பதிவை தூக்கிப்புட்டேன் :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

////இம்புட்டு உதவி அனேகமா இங்க பேசின யாருக்கும் கிடைச்சிருக்காது :)// அமைதியா கமண்ட் போடாதவங்க யாராவது இருப்பாங்க வனி.//

ம்!

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

எப்படி இப்படிலாம்... எம்புட்டு காலமாச்சு உங்களை பார்த்து :) வாங்க வாங்க. அப்போ இமா சொன்னதை நீங்க ஒத்துக்குறீங்களா?? உங்க வீட்டிலும் நீங்க இந்த அளவு உதவுறீங்களா??!!! வந்து “ம்” சொல்லி போனா எப்படி??? பதிவிடலாம் தானே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//சீக்கிரமே சமையல் கத்துகிட்டு கல்யாணமும் பண்ணிகிட்டு // சீக்கிரமே சமையல் வேணா கத்துக்கிறேன். பட் கல்யாணம் மட்டும், இன்னும் கொஞ்ச நாள் பேச்சுலர் லைப் நல்லா என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா பண்ணிக்கலாம் ;)

//அம்மா அப்பாக்குலாம் இப்படி வகையா வகையா செய்து கொடுக்க முடியலயேன்னு. எப்பவாது வருடத்தில் ஒரு முறை அப்பா அம்மா இங்க வந்தா தான் ஆசை கொஞ்சம் நிரைவேரும். நீங்க பின்னாடி இப்படி ஃபீல் பண்ண கூடாதில்ல// நீங்க சொல்றதும் கரெக்ட்.. கஷ்டப்பட்டு சமைக்க கத்துகிட்டு, நம்ம அம்மாக்கும் அப்பாக்கும் சமைச்சு போட முடியலேன்னா கண்டிப்பா வருத்தமா தான் இருக்கும். கண்டிப்பா சமைக்க முன்னாடியே கத்துக்கிறேன். ;)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

அன்பு சகோ வரவேற்ப்புக்கு மிகவும் நன்றி.

// எப்படி இப்படிலாம்... எம்புட்டு காலமாச்சு உங்களை பார்த்து :) வாங்க வாங்க. அப்போ இமா சொன்னதை நீங்க ஒத்துக்குறீங்களா?? உங்க வீட்டிலும் நீங்க இந்த அளவு உதவுறீங்களா??!!! வந்து “ம்” சொல்லி போனா எப்படி??? பதிவிடலாம் தானே?//

ஆம் நானும் ஒத்து ஊதுகிறேன்.

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?
வரலாமே:) அனுமதி இருந்தால்:)))))(அதான் இல்லையே)

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?
உதவுவதே மிக நல்ல விசயம்தான் அது ஏன் சமையலோடு நிறுத்த வேண்டும்.

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?
மேனுப்ஃபேக்சரிங் டிஃபக்ட். மரபணுவழியாக, கற்காலம் தொட்டே ஆண்கள் வேட்டையாடியதை கொண்டுவருவதும், பெண்கள் உணவை சேகரிப்பவர்களாகவும், பாதுகாப்பவர்களாகவும், அதே போல் வயதானோர் மேலும் குழந்தைகளை பாதுகாப்பவர்களாகவும் இருந்ததால் தான். இன்றய சமூகமும் அதையே இன்னும் முன் மொழிகிறது. காலத்திற்கு தகுந்த மாதிரி அரசியல் சாசனத்தையே இன்னும் மாற்றி எழுதவில்லையே. இதை எப்படி இவ்வளவு சீக்கிரமாக மாற்ற முடியும்.

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?
ரொம்பவும் சுலபமான விசயம்தான். எங்கள் “குரு நள மகாராசா” வை அடிச்சிக்க ஆளே இன்னும் பிறக்கலையே:))) அது ஏன் இன்னும் 99% உணவக சமையல்காரர்கள் ஆண்கள்தானே….இந்த வசனத்தை மேலே வைங்கோ ப்ளீஸ்!

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?
அடுத்த தடவை குறை சொல்ல சான்சே கொடுக்க கூடாது என தோணும்.

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு? நானும் என் நண்பனும்(நண்பி அல்ல) சுமார் 50 பேருக்கு ரெண்டே ரெண்டு டிஷ் மட்டும்.

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?
நான் அவனில்லை:). நோ கமெண்ஸ்ஸ் ப்ளீஸ்ஸ்!!!
-------------------------------------------------

//கண்டிப்பா வரலாம்... வரணும். வந்து தண்ணி குடிச்சுட்டு போயிடப்படாது. கூடமாட நின்னு உதவி செய்யணும். ஆனா உதவி செய்யறேன்னு உப்புக்கு பதிலா சர்க்கரையை போடறது காய் வெட்டறேன்னு சொல்லி கன்னாபின்னான்னு கட் பண்றது, காஃபி போட்டுத்தரேன்னு சொல்லி ஷெல்ஃபில் உள்ள மொத்த பாத்திரங்களையும் சிங்குக்கு கொண்டுவரதுன்னு லொள்ளு பண்ணாம உருப்படியா உதவணும். இதெல்லாம் ஒழுங்கா பண்ணினாதான் அட்லீஸ்ட் மனைவிக்கு உடம்பு முடியலேன்னா ஒரு சாதமும் ரசமும் வச்சாவது சமாளிக்க முடியும். மனைவிமார்களே உங்க மாமியார் பையனுக்கு சமையல் கத்துக் கொடுக்கலேன்னாலும் நீங்க உட்கார வச்சு சமையல் ட்யூஷன் எடுத்துடுங்க :)//

// எங்க வீட்டிலும் நீங்க சொல்லும் சூழல் ரொம்ப நாளா இருந்துது... இப்ப இல்லை. ;) அவங்க வளரும் சூழல் காரணம். விடாதீங்கோ உங்க பிள்ளைகளை... அப்பறம் ரெஸ்ட் எப்பவுமே இல்லாம போகும், கூடவே மருமககிட்டையும் டோஸ் வாங்க வேண்டிவந்துரும். :(//

இதை நான் வன்மையாக “ஆமோதிக்கிறேன்” ஒரு சின்ன ஆலோசனை:) 5ல் வளையாதது 50ல் எப்படி வளையும், நிகழ்கால அம்மாகளே! வருங்கால அம்மாகளே உங்கள் பிள்ளைகளுக்கு 5வயதிலேயே சமையலை கற்றுக்கொடுத்து உங்களின் வருங்கால மருமகளிடம் நல்ல பேர் வாங்க ட்ரை பண்ணுங்கோ!
-------------------------------------------------

//எனக்கு என்ன தோணுதுன்னா, நிறைய பெண்களே - ‘இது எங்க ஏரியா, உள்ள வராதீங்க’ன்னு சொல்றாங்களோன்னு தோணுது. அதுவுமில்லாம, கண்டிப்பாக சொந்தக்காரங்க கேலி பண்ணுவாங்க என்ற பயம் இருக்கும்.
சில பேருக்கு தானே வேலை செய்தால்தான் பிடிக்கும். கணவருக்கு சொல்லிக் கொடுத்து, அதுக்கு டைம் ஆகுற நேரத்துல நாமே செய்துடலாமேன்னு தோணுதோ என்னவோ.//

இதை நான் ஆமோதிக்கிறேன்.
-------------------------------------------------

// >>ரொம்ப நல்ல விஷயம்.முதலில் உதவியில் ஸ்டார்ட் செய்து படிப்படியா அப்புறம் நமக்கு ஒரு நாள் பிரேக் தந்து அவங்களும் நமக்கு பிடித்ததெல்லாம் சமைக்கவும் வேணும்.(எப்புடீ !!!)//

எப்பூடி இப்பூடி வில்லதனமான யோசிக்கிறாங்களோ! அதுக்கு பயந்து போய்தான் சகோஸ் எல்லாம் உதவ முன்வரமாட்டேன் என்கிறார்களோ!!!

// >>எல்லா சமையலுக்கு basic concept இருக்கு.அதனை கத்துகிட்டா nCr combination போலே இன்பினிட்டி ரேஞ்சுக்கு அசத்தலாம்.கொஞ்சம் பொறுமை,கொஞ்சம் planning,நிறைய common sense இருந்தாலே போதும் அசத்தலாம்//

ஓகோ இப்பூடிதான் ப்லான் பண்ணி ப்லான் பண்ணி அசத்திபுடறாங்களோ!
-------------------------------------------------

// “என்ன இப்படி சொல்றீங்க... அவங்களை இப்படி இண்டிபெண்டண்ட்டா இருக்க விட்டுட்டா அப்பறம் நம்மை நினைக்கவே மாட்டாங்க, இதெல்லாம் நாம இல்லன்னா 1 நாள் கூட சமாளிக்க முடியாதுன்ற ஸ்டேஜ்ஜுல தான் விட்டு வைக்கணும்”னு எனக்கு அட்வைஸ் பண்ணாங்க. ;)//

அந்த மாதிரி விட்டதால்தானே அறுசுவைக்கே வந்தேன்:)

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்