ஆண்களும் சமையலும்!!!

புதுசா ஒரு தலைப்பு புதுசா ஒரு தலைப்புன்னு எல்லாரும் கேட்டீங்க... எனக்கும் எப்படி யோசிச்சாலும் மண்டையில் ஸ்டாக் இல்லாத மாதிரியே இருந்துது. இப்ப எதேர்சையாக விஜய் டிவி நீயா நானா பார்க்கும் போது தான் மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சுது... துவங்கிட்டேன். ;) இங்க நீங்க பகிர்ந்துக்க வேண்டிய விஷயம்...

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?

இப்படி எதை பற்றி வேணும்னாலும் உங்க கருத்தை இங்கே பதியலாம். தமிழ் பதிவு... முடிஞ்சவரை இதை மட்டும் கடைபிடிங்க. ப்ளீஸ் :) பதிவுகளோட வாங்க... இண்ட்ரஸ்டிங்கா எதாவது கதைப்போம்.

பலரும் பதிவிட்டு இருக்கிறீங்கள். நன்றி. இன்று தான் பார்க்கிறேன். பதில் பதிவிடவில்லை என தவறாக எண்ண வேண்டாம், மன்னியுங்கள். வருகிறேன் நேரம் கிடைக்கும் போது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் அக்கா,
உங்க பதிவு நல்லாயிருக்கு.
ஆனா இதுல நீங்க சொல்ற மாதிரி ஈகோ போகோ எல்லாம் ஒண்ணும் இல்ல..
ஆணின் தனித்துவம். இப்போ எனக்கு சமையல்ல ஆர்வம் ஆனா என் பையனுக்கு இருக்குமான்னு சொல்ல முடியாது. ஆனா கொண்டு வரலாம்.
எந்த ஆணும் உதவி பண்ண கூடாதுன்னு கிடையாது.
பெண்ணோட கைல தான் இருக்கு.
நன்றி

நாங்க எல்லாரும் நலம் ஈஸ்வரி :) நீங்க எப்படி இருக்கீங்க? 15 பேருக்கு தனியாவா? கலக்குங்க ஈஸ்வரி. //சில சமயத்துல நாம வேணம்னு சொன்னலும் உதவுவாங்க,மத்த நேரத்துல எவ்ளோ கேட்டாலும்,செய்ய மாட்டங்க .// - எல்லாரும் இப்படி தான் போலும் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது சரி... பெண்களும் வேலைக்கு போறவங்க இருக்காங்களே... அப்படி போறவங்களுக்கும் எந்த ஹெல்ப்பும் கிடைக்காம, வீட்டு வேலை, பிள்ளைகள் வேலை, வெளி வேலைன்னு எல்லாத்தையும் சுமக்கறாங்களே!!! அவங்க சுமையை பகிர்ந்துக்கலாமேன்னு கேட்டது தான். அன்பே இல்லாத கணவன் மனைவி கொஞ்சம் கம்மி தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாடா... முதல் வரியை படிச்சதும் பயந்துட்டேன் ;) கடைச்சி வரியில் சந்தோஷம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நியாயமான கேள்வி... :) உங்களை நாங்க கட்சியில் சேர்த்துக்குறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் :)

ம்ம்... எங்க கைல என்னங்க இருக்கு, நாங்க கெஞ்சினாலும் சில நேரம் நோ சொல்லிடுறாங்களே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்