மட்டன் பிரியாணி

தேதி: August 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (16 votes)

திருமதி. .மாலதி அவர்களின் செட்டிநாட்டு மட்டன் பிரியாணி குறிப்பை பார்த்து சிறு மாற்றங்களுடன் திருமதி. வனிதா அவர்கள் செய்தது.

 

சீரக சம்பா அரிசி - 3 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பல்
பெரிய வெங்காயம் - 4
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
கிராம்பு - 4
பட்டை - 4 துண்டு
ஜாதிக்காய் - பாதி
ஏலக்காய் - 4
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 10
தயிர் - அரை கப்
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு
தாளிக்க:
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி


 

மட்டனில் கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தை லேசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
வெங்காயக் கலவை 2 நிமிடங்கள் வதங்கியதும் வறுத்து பொடித்தவற்றை சேர்த்து மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
தேங்காயுடன் இஞ்சி, முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். (இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ்காகத்தான்). நான் முந்திரி சேர்க்காமல் செய்துள்ளேன்.
தேங்காய் பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித் தழை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு வேகவிடவும். பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.
சுவையான செட்டிநாட்டு மட்டன் பிரியாணி தயார். மாலதி சொன்னது போல் இதன் சுவைக்கு எப்பவும் இதே முறையில் தான் செய்யத் தோன்றும். பலமுறை செய்து சுவைத்தாயிற்று. நன்றி மாலதி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மட்டன் பிரியாணி .. சோ டெம்ப்டிங் நா தான் முதல் சோ எனகு தான் அந்த பிரியாணி ரெசர்வ்ட் அக்கா.. யாருக்கும் குடுக்ககூடாது சொல்லிப்புட்டேன்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அக்கா பிரியானி சுப்பர். இப்போவே நா செய்யனும் போல இருக்கு பட் இப்போ முடியாது ஆனா இந்த பிரியானி ஒரு நாள் நா செய்துட்டு உங்களுக்கு நா பதில் சொல்லுரேன்

வனி பிரியாணி ரொம்ப சுவையா இருக்கும்னு செய்முறை பாக்கும்போதே தெரியுது கண்டிப்பா நானும் ஒரு நாள் செய்துட்டு சொல்றேன் :)
வாழ்த்துக்கள் வனி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அக்கா பிரியாணி பார்க்கும்போதே வாயூறுதே.... சூப்பர் போங்க..... அக்கா மட்டன் ஸ்டாக் மட்டும்தான் ஊற்றனுமா? மட்டன என்ன பண்றது. சிக்கன்ல இத பண்ணலாமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆஹ்!!! இப்படிலாம் கேட்டா எப்புடி :( மட்டன் பிரியாணியில் மட்டன் இல்லாமலா? மட்டன் வேக வெச்ச நீரையும் சேர்த்துன்னு சொன்னது நீர் அளவுக்காக தான். நீரோடு சேர்த்து வேக வெச்ச மட்டனையும் சேருங்க. :) சிக்கன்ல செய்யலாம்... செய்தா நல்லா தான் இருக்கும்... அதுல ஒரு டவுட்டும் இல்லை. நான் இதுவரை அவங்க குறிப்புபடி மட்டன் மட்டும் தான் பண்ணிருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா வனி..ஒரு 2நாள் இல்லனா இப்படியா ஆளாளுக்கு பட்டைய கிளப்பறிங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் விருப்ப பட்டியல்ல செய்ய வேண்டிய குறிப்பு லிஸ்ட் ஏறிக்குனே போகுதே.....சீக்கிரம் செய்துட்டு சொல்லிபோட்டுடுறோம்...இது சீரக சம்பா அரிசிலதான் செய்யனுமா..இல்ல பாசுமதி அரிசிலயும் செய்துக்கலாமா..சொலுங்க...

Be simple be sample

வனிதா அக்கா இன்னைக்கு வீட்ல மட்டன் பிரியாணி தான். நீங்க கொடுக்கிற சமையல் டிப்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா. உங்க அட்ரஸ் மட்டும் தாங்க உங்க கிட்ட வந்து சமையல் கத்துகிறேன். அம்மா சொல்றாங்க எனக்கு கவலை இல்லை அறுசுவை பார்த்து நீ சமையல கத்துக்கோ அப்படீனு. சமையல் குருவே என்னை தங்கள் சிஷ்யையாக ஏற்று கொள்வீர்களா.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

வனி மட்டனுக்கு பதிலா சிக்கன் போட்டு செய்தேன் பிரியாணி ரொம்ப நல்லா இருந்துச்சு :) தேங்க்யூ வனி :) வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், சுவையான குறிப்பை தந்த மாலதிக்கும் மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படியே எடுத்துக்கங்க ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் எப்போ செய்தாலும் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்களே நான்வெஜ் ஸ்பெஷலிஸ்ட் ;) இருந்தாலும் என் ரெசிபி இல்லன்றதால கான்ஃபிடண்டா செய்யுங்க :D மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்துட்டீங்களா??? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரியாணி கேட்க ஆளில்லாதப்ப செய்தாதானே நல்லா சாப்பிட முடியும் ;) அதான் நீங்க இல்லாதப்போவே எல்லாரும் செய்யறோம். நான் செய்ததும் பாசுமதி தான் ;) சூப்பரா இருக்கும் எந்த அரிசி பயன்படுத்தினாலும். அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பிரியாணி எப்படி வந்ததுன்னு சொல்லவே இல்லையே. // சமையல் குருவே என்னை தங்கள் சிஷ்யையாக ஏற்று கொள்வீர்களா// - ஹஹஹா. நல்லா கவனிங்க இது என் ரெசிபி இல்லையாக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா கேட்டிருந்தாங்களேன்னு நானும் இம்முறை வீட்டில் சிக்கன் இது போல செய்தேன். சூப்பரா இருந்துது, எங்களுக்கும் பிடிச்சுது. :) செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அருள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப வித்யாசமான பிரியாணி குறிப்பு. மட்டன் இப்போ இல்ல, சிக்கனில் செய்து பாக்குறேன்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி.... மட்டன் பிரியாணி செய்தாச்சு.... சாப்பிட்டாச்சு.... :)
ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இப்பதான் முதல்முறையா மட்டன் பிரியாணி செய்தேன். எங்க வீட்டில் சூப்பர் ஹிட். கொஞ்சம் கூட மீதி வரலை. மொத்தமா காலி பண்ணிட்டோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாவ்!!! படமும் அசத்தலா இருந்துது ;) இன்னைக்கு நீங்க சொல்லாம இருந்திருந்தா அதை நான் மிஸ் பண்ணி இருப்பேன். செய்து பார்த்து கருத்தும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரியாணி செய்து சாப்டாச்சு சூப்பர். குறிப்பு தந்த வனிக்கும், மாலதிக்கும் நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

How much amount of rice ? Please mentioned in kilogram

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

600 கிராம் அரிசி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா