உருளைக்கிழங்கு கட்லெட்

தேதி: August 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (17 votes)

 

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய மல்லித் தழை - 2 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
ப்ரெட் க்ரெம்ப்ஸ் - முக்கால் கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் எண்ணெயை சூடாக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். (சிவக்க வதக்க வேண்டாம்).
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்குடன் வதக்கியவற்றை சேர்த்து, கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து பிசையவும். (இந்த கலவையை கையில் வைத்து உருட்டினால் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும். சற்று ஒட்டுவது போல் இருந்தால் ஒரு மேசைக்கரண்டி அளவு ப்ரெட் க்ரெம்ப்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்).
சிறு எலுமிச்சை அளவு கலவையை எடுத்து விருப்பமான வடிவில் தட்டி முட்டையின் வெள்ளைக்கருவில் தோய்த்தெடுத்து வைக்கவும். (முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்).
அதை ப்ரெட் க்ரெம்ப்ஸில் நன்றாக பிரட்டி 20 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் ப்ரெட் க்ரெம்ப்ஸ் நன்றாக ஒட்டிக்கொள்ளும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் கட்லெட்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் தயார். சில்லி சாஸுடன் சூடாக பரிமாறவும்.

கட்லெட்டுகளை ப்ரெட் க்ரெம்ப்ஸில் பிரட்டி ஒரு தட்டில் பரவலாக அடுக்கி ஃப்ரீசரில் வைத்து உறைந்ததும் ஜிப்லாக்கில் போட்டு ஃப்ரீசரில் வைத்துக்கொண்டால் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தேவையான போது எடுத்து டீஃப்ராஸ்ட் செய்து பொரிக்கலாம். உருளைக்கிழங்குடன் வேகவைத்த பட்டாணியும் சேர்த்துக்கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்.. சூப்பர் கிரிஸ்பி கட்லெட் .. கடைசி ப்ளேட் ல ஒரு கட்லட் ப்ளீஸ்.. hmm yammiyaanoo...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அக்கா சூப்பர்... கனிக்கு ஒரு கட்லட் போதும்... மத்ததெல்லாம் எனக்குதான்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கவிசிவா கட்லெட் அருமையா இருக்கு பார்க்க சாப்பிடவும் நல்லா மொருமொருப்பாக இருக்கும் போல தெரியுது, நாளைக்கு செய்துடுறேன்

கவி கட்லெட் சாப்பிட்டுக்கிட்டேதான் பதிவு போடுறேன் :) நல்லா இருந்திச்சு கவி :)நீங்க சொன்னதில 2 பொருட்கள் இல்லைப்பா, இருந்தாலும் நல்லா இருக்கு :)
அதோ தூரத்தில கட்லெட் மலையை தாண்டி தெரியுதே கேரட் ரோஸ், அது எனக்குத்தான் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கட்லட் சூப்பர் :) ஊருக்கு வன்த பின் ட்ரை பண்றேன், அல்லது இங்கையே ஒரு நாள் ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா சூப்பர் கட்லெட் செய்தாச்சு சாபிட்டுகிட்டே ருசிச்சுகிட்டே உங்க கிட்ட அத சேர் பண்ணிக்கிறேன் ரொம்ப நல்லா இருந்துச்சு எங்க 2 வாண்டுஸுக்கும் உள்ள போயிகிட்டே இருக்கு. நன்றி

கவி கட்லெட் அருமையா இருக்கு கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்புகளை வெளியிட்டு ஊக்குவிக்கும் அன்பு டீம் க்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி! முதலில் வந்த உங்களுக்கு ஒரு கட்லெட் பார்சே....ல் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி உமா! உமாவுக்கும் கட்லெட் பார்சே....ல் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி உமா! கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா! செய்தாச்சா... நன்றி அருள். ஃபோட்டோவும் பார்த்தேனே.. சூப்பரா இருந்துச்சு.
அருள் அது கேரட் ரோஸ் இல்லை. தக்காளி ரோஸ் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வனி! சூடா செய்து சாப்பிடுங்க. பெங்களூரு குளிருக்கு சூப்பரா இருக்கும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்களும் செய்தாச்சா. நன்றி தேவி!
குட்டீஸ்க்கு பிடிச்சுதா. டபுள் சந்தோஷம் எனக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுவா! கண்டிப்பா செய்து பாருங்க. ஃபோட்டோவும் வேணும் சொல்லிட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அம்மே ........ நான் இந்த பக்கம் வர 2நாள் ஆச்சுன்னா..இப்படியா.. ம்ம்ம்ம்ம்ம் நானும் இந்த வாரம் செய்துட்டு சொல்லறேன்...ஆசைய கூட்டூது...

Be simple be sample

ஹீ ஹீ கவி, உங்கூர் தக்காளி எங்கண்ணையே ஏமாத்திபுடுச்சே :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கட்லெட் சூப்பரா இருந்தது.....:-) குறிப்பிற்கு நன்றி,முகநூலில் ஃபோட்டோ பாருங்க..:-)

கவி,

இது ஈசியா இருக்கு, செய்து பார்க்க ஆசையா இருக்கு... இங்கே அடிக்கடி மழை பெய்வதால் இந்த உருளை கட்லெட் செய்து தந்தால் பொண்ணு ரொம்ப விரும்புவான்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

ஆனால் அதில் ஒரு சந்தேகம். இந்த ப்ரெட் க்ரம்ஸ் என்பது ப்ரெட் தூள் தானே. அதை வீட்டிலேயே செய்யலாமா இல்லை கடைகளில் எப்படி கேட்டு வாங்குவது?

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நன்றி ரேணு! ஃபோட்டோ பார்த்தேன். ரொம்ப நல்லா செய்திருந்தீங்க. மிக்க மகிழ்ச்சி பா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தாமதமான பதிலுக்கு மன்னிச்சூ மன்னிச்சூ ப்ரேம்ஸ் :)

ப்ரெட் தூள்தான். ப்ரெட்டை டோஸ்ட் செய்து மிக்சியில் பொடித்தும் பயன் படுத்தலாம். பஹாசா இந்தோனேஷியாவில் "தெப்புங் ரொத்தி" (tepung roti) அப்படீங்கறாங்க. மலாயிலும் அதேதான்னு நினைக்கிறேன். கேட்டு பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!