பேக்டு ஃபிஷ்

தேதி: August 15, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

விரும்பிய மீன் துண்டுகள் - 4
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தட்டிய பூண்டு - 6
வெண்ணெய் - சிறிது
சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிது
தக்காளி ஃப்ளேக்ஸ் - சிறிது
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
தேன் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் - தேவைக்கு
பெப்பர் - தேவைக்கு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். மீன் துண்டுகளைக் கழுவிக் கொள்ளவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கலந்து மீன் துண்டுகளுடன் சேர்த்துப் பிரட்டவும்
அவனை 400 டிகிரிக்கு முற்சூடு செய்து மீன் துண்டுகளை ட்ரேயில் வைத்து பேக் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து மீன் நன்கு வெந்ததும் ப்ராயிலில் 2 நிமிடங்கள் வைத்து வெளியே எடுக்கவும்.
ஹெல்தியான ஃபிஷ் ஃப்ரை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெல்க்கம் பேக் ரம்ஸ் :) வரும்போதே அட்டகாசமா வறீங்களே அப்படியே எனக்குதான் எல்லாமே ;) சூப்பர் ரம்ஸ்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

2முறை பதிவாயிடுச்சு :o

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஃபிஷ் சூப்பரா இருக்கு ரம்யா.... நீங்க யூஸ் பண்ணிருக்கது என்ன மீன்? சுவர்ணா முந்திட்டாங்க இல்லன்னா எல்லாம் எனக்குதான்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

காணாம போன ஆளு ரிடன் வரும் போது மீனோட வந்திருக்கு ;) சூப்பரப்பு. படங்களும், குறிப்பும்.... சாப்பிட்டு அப்பறம் சுவையும்னு சொல்வேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்கோ!! வாங்கோ!! :)வரும்போதே மீன் வாசனை ஆளத்தூக்குதே!! :) ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்ககுறிப்பை இங்க பார்க்கிறேன் :) வாழ்த்துக்கள் ரம்ஸ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நன்றி

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி

ஸ்வரு
முதல் பதிவுக்கு மிக்க நன்றி. எல்லாமே உங்களுக்கே.. எடுத்துக்கோங்க...:)

உமா
நன்றி.. பரவால.. இன்னொரு முறை செய்து கொடுத்தா போச்சு :)

வனி
இது நீங்க அவன்ல அழகா செய்யலாம்.. செய்து பார்த்து சொல்லுங்க... நன்றி ;)

அருளு
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா அக்கா குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு அண்ட் கண்டிப்பா ஹெல்தி வெர்ஷன் ல சூப்பர் ரெசிபி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஃபிஷ் ஃப்ரை ரொம்ப ரொம்ப அருமைங்க, படங்களும் ரொம்ப நல்லா இருக்குங்க,

நட்புடன்
குணா

ஹாய் ரம்ஸ்,

எப்பவும் போல் உங்களோட இந்த குறிப்பிலும் படங்கள் பளீர் அண்ட் அதுல இருக்க பேக்டு ஃபிஷ் ஹெல்தி அண்ட் யம்மி... (ஜொல்லு விட மட்டும் தான் முடிய்து).

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்