ஸ்டிக் ரோல்ஸ்

தேதி: August 17, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

சமோசா தாள் (சிறியது) - ஒரு பாக்கெட்
வேக வைத்த கோழி - 50 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
துருவிய கேரட் - 2
துருவிய கோஸ் - சிறிது
பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஃப்ரீசரிலிருந்து சமோசா தாளை வெளியே எடுத்து வைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். அதனுடன் ஒன்றன்பின் ஒன்றாக கோஸ், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, மசித்த உருளைக்கிழங்கு, மல்லித் தழை, உப்பு மற்றும் வேக வைத்த கோழிக் கலவை சேர்த்து பூரணம் போல் பிரட்டி வைக்கவும்.
சமோசா தாளின் ஓரத்தில் சிறிது பூரணம் வைத்து இருபுறமும் மடிக்கவும். ஓரத்தில் சிறிது மைதாவை குழைத்து தடவி ஒட்டி அப்படியே ரோல் செய்யவும்.
இதேபோல் தேவைக்கேற்ப ரோல்களை தயார் செய்து, வாணலியில் எண்ணெயை சூடாக்கி ரோல்களை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சுவையான ஸ்டிக் ரோல்ஸ் ரெடி.

ரோல்களை தயார் செய்து ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது எடுத்து 10 நிமிடங்கள் வெளியில் வைத்திருந்து, பின் ரோல்களை பொரித்து பரிமாறலாம். சமோசா தாள் கிடைக்கவில்லையெனில் மாவை சப்பாத்தி போல் போட்டு ரோல்களாக செய்து கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அக்கா டேஸ்டி ரோல்ஸ்...... யம்மி...... சூப்பர். நான் தான் ஃபர்ஸ்ட் எல்லாம் எனக்குதான்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஸ்டிக் ரோல்ஸ் அருமை. சமோசா தாளுக்குப் பதிலா கோதுமை மாவை பயன்னடுத்தலாமா?
பச்சை பட்டாணியை ஊற வைக்க வேண்டாமா? வதக்கினால் வெந்துவிடுமா?

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

super pa கண்டிப்பா நான் செய்து பார்க்கிறேன்

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்ற,அப்படியே எடுதுக்குங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சமோசா தாளுக்குப் பதில் கோதுமை பயன்படுத்தலாம்,மெலிதாக வளர்த்து செய்யவும்,ஆனால் சுவை மாறுபடும்.நான் ப்ரோசன் பட்டாணி உபயோகித்தேன்,உளர்ந்த பட்டாணியாக இருந்த்தால் ஊற விட்டு வேகவைத்து செய்யவும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

செய்து பாருங்க நல்லா வரும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அக்கா ரோல்ஸ் ரொம்ப நல்லா இருக்கு ... டைம் கிடைக்கும் போது ட்ரை பண்ணீட்டு சொல்லுறேன் அக்கா ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

டேஸ்டி ரோல்ஸ். சூப்பர்.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

s sathya arumugam

செய்து பாருங்க,நன்றி கனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி சத்யா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Superp..... Saptanum pola iruku

ஹாய் முசி நலமா ஸ்டிக் ரோல்ஸ் சூப்பர்ரா இருக்கு

ஸ்டிக் ரோல்ஸ் சூப்பரா இருக்கு... நான் ஒருமுறை இந்த சமோசா தாள் வாங்கி அதில் எப்படி சமோசா செய்வது என்று சரியாக தெரியாமல் தூக்கி தூர தான் போட்டேன்... அடுத்தமுறை கண்டிப்பா உங்க ஸ்டிக் ரோல்ஸ் செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்லா இருக்கேன்,நீங்க?உங்கள் அன்பான பதிவிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அடுத்தமுறை சமோசா தாள் வாங்ங்கும் போது இது போல் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.