மைதாமா (கோதுமைமா) வறுப்பது எப்படி?

தேதி: August 23, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

மைதாமா (கோதுமைமா) - 1 கிலோ


 

ஒரு அரிதட்டினால் மைதாமாவை (கோதுமைமாவை) பூச்சி புழுக்கள் இல்லாதவாறு அரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போடவும்.

பின்னர் அடுப்பில் வாணலியை (தாட்சியை) வைத்து சூடாக்கவும்

சூடாக்கிய பின்னர் அதில் அரித்த(சலித்த) மாவை போட்டு ஒரு மர அகப்பையினாள் கட்டிபடாமல் மா கருகாமல் பொன்நிறமாக வறுக்கவும்

மாவை வறுத்ததும் அதனை அடுப்பில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்

அதன் பின்னர் அதனை ஆறவிட்டு அரித்து(சலித்து) ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

அதன் பின்னர் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு காற்று புகாதவாறு மூடி வைக்கவும்.

பின்பு வறுத்த மைதாமா (கோதுமைமா) தேவைப்படும் போது இதனை பாவிக்கலாம்.


மர அகப்பையினாள் மா கட்டிபடாமல் கருகாமல் பொன்நிறமாக வறுக்கவும்
இந்த மாவில் புட்டு அவிக்கலாம் தோசை சுடலாம்

மேலும் சில குறிப்புகள்