சேப்பங்கிழங்கு மசாலா

தேதி: October 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - ஒன்று
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பற்கள்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சோம்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி


 

சேப்பங்கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு வேண்டிய துண்டுகள் செய்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய கிழங்கை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். அடுப்பின் அனலை நன்கு கூட்டி வறுக்கவும். பிறகு சோம்பை போட்டு தொடர்ந்து வெங்காயம் பூண்டைப் போட்டு வதக்கி வெங்காயம் வெந்தவுடன் பச்சைமிளகாய், இஞ்சி விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி கறிவேப்பிலையை போட்டு தொடர்ந்து எல்லாத்தூளையும் போடு உப்பைத் தூவி நன்கு வதக்கி விடவும்.
பிறகு ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி மூடியைப் போட்டு அனலைக் குறைத்து வைத்து வேகவிடவும்.
கிழங்கு நன்கு வெந்தவுடன் கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி அக்கா தேவையான பொருட்களில் சோம்புக்கு பதில் என்ன இருக்குன்னு பாருங்க, மாத்தி விடுஙக
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சோப்பை மாற்றிவிட்டேன் நன்றி ரேணுகா, பார்த்ததும் சிரிப்பு ஒரு பக்கமும், எழுத்துபிழையை நினைத்து வருத்தம் ஒரு பக்கமுமாகிவிட்டது.தவறை சுட்டி காட்டியதற்கு மனமார்ந்த நன்றி.