உருளைக்கிழங்கும் குடைமிளகாயும்

தேதி: November 1, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
பச்சைநிற குடைமிளகாய் - இரண்டு
சிவப்பு வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - ஐந்து
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணெய் - கால் கோப்பை
உப்புத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
குடைமிளகாயை வேண்டிய அளவிற்கு நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி காய வைத்து கடுகு சீரகத்தை போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வெந்தவுடன் குடைமிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு எல்லாத்தூளை போட்டு உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
குடைமிளகாய் நன்கு வெந்தவுடன் உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி எலுமிச்சைரசத்தை தெளித்து நன்கு கிளறிவிட்டு இறக்கி விடவும். இதை பக்க உணவாக சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உருளைக் கிழங்கு குடை மிளகாய் செய்து பார்த்தேன். மிக நன்றாக இருந்தது சப்பாத்தியுடன். மிக்க நன்றி.

god is my sheperd