வெஜிடபுள் க்ரெய்ன் சூப்

தேதி: September 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

 

கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
காலிஃப்ளவர் - 100 கிராம்
வெண்டைக்காய் - 2
லீக்ஸ்/வெங்காயத்தாள் - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
ஊறவைத்த கொண்டைக்கடலை - அரை கப்
ஊறவைத்த பயறு - அரை கப்
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி
சூப் க்யூப் - ஒன்று
உப்பு - தேவையான அளவு


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். காய்கறிகளை விரும்பிய வடிவில் (நீளமாகவோ அல்லது சதுரமாகவோ) நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் காய்கறிகள், தக்காளி, கொண்டைக்கடலை, பயறு, துவரம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்தவற்றைச் சேர்த்து, தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி சூப் க்யூபைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
சூப் க்யூப் கரைந்ததும் கார்ன் ஃப்ளாரை கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
டேஸ்டி & ஹெல்தி வெஜிடபுள் க்ரெய்ன் சூப் ரெடி. ப்ரெட் டோஸ்ட்டுடன் பரிமாறவும்.

விரும்பினால் ஒரு உருளைக்கிழங்கு சேர்க்கலாம். மிளகுக்கு பதிலாக பரிமாறும்போது மிளகுத் தூள் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

விருப்பப் பட்டியலில் சேர்த்தாச்சு.

‍- இமா க்றிஸ்

அக்கா வெஜிடபுள் க்ரெய்ன் சூப் சூப்பர்.... சூப் ரெசினாலே ரொம்ப இஷ்டம் அக்கா இந்த சண்டே ட்ரை பண்ட்ரேன் அக்கா ... நல்ல குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவிற்கு நன்றி மேடம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி கனி. செய்து பார்த்துட்டு பதிவு போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Hi akka, soup na enakku romba pudikkum. Ipave senju pathuduren. Nice photos ka Super...

Tnk u jo.... seythu paathuttu epdi irunthathunnu sollunga.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா