கூவை

தேதி: September 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
சீனி - ஒன்றரை கப்
தேங்காய் பால் - 400 மில்லி
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
ஃபுட் கலர் - ரோஸ் மற்றும் ஊதா (அ) விரும்பிய 2 நிறங்களில்
தண்ணீர் - ஒன்றரை கப் + முக்கால் கப்
பான்டன் இலை - சிறிது


 

சீனியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பான்டன் இலை மற்றும் சோம்புத் தூள் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகை அதிகமாக கொதிக்கவிட வேண்டாம். 3 முறை கொதித்தால் போதுமானது.
அரிசியைக் களைந்து 4 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அரிசி ஊறியதும் மிக்ஸியில் போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும். அதனுடன் தேங்காய் பால், வடிகட்டிய சீனிபாகு சேர்த்து கரைக்கவும். மாவு கரைக்கும் போது நீர்க்கவுமில்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும். பிறகு ஒரு முறை மாவை வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரே அளவுள்ள மூன்று கோப்பைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு கோப்பையில் கலந்துள்ள மாவில் மூன்றில் ஒரு பங்கை ஊற்றவும். மீதமுள்ள மாவில் ஒரு பங்கில் ரோஸ் கலரும், மற்றொரு பங்கில் ஊதா கலரும் கலந்து தனித்தனி கோப்பைகளில் ஊற்றிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கலவடையை வைத்து, அதில் மாவுக் கலவையை வேகவைக்க ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரத்தின் மூடியில் துணியைக் கட்டிக் கொள்ளவும். பிறகு மாவுக் கலவைக்காக வைத்த பாத்திரத்தில் 2 குழிக்கரண்டி அளவு ரோஸ் கலர் மாவை ஊற்றி மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். இதேபோல் மேலும் இரண்டு முறை ரோஸ் கலர் மாவை ஊற்றி தலா 5 நிமிடங்கள் வேகவிடவும். (இப்படிச் செய்வதால் மாவு வெந்த பின் துண்டுகள் போடச் சுலபமாக இருக்கும். மேலும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் தனித்தனி லேயர்களாகவும் இருக்கும்).
ரோஸ் கலர் வெந்ததும் அதன் மீது 2 குழிக்கரண்டி அளவு வெள்ளை கலர் மாவை ஊற்றி 5 நிமிடங்கள் வேகவிடவும். (ரோஸ் கலரை வேக வைத்தது போல மூன்று லேயர்களாக ஊற்றி தலா 5 நிமிடங்கள் வேகவிடவும்).
கடைசியாக ஊதா கலர் மாவையும் இதே போல் மூன்று லேயர்களாக ஊற்றி வேகவிடவும். நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மணி நேரம் ஆறவிடவும். ஆறியதும் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுக்கவும்.
சுவையான கூவை தயார். விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

இதைச் செய்வதற்கு அதிக நேரமாகும். ஒவ்வொரு முறையும் மாவு 5 நிமிடத்தில் வெந்துவிடும். தொட்டால் கையில் ஒட்டும் பதத்தில் தான் இருக்கும். எனவே வேகவில்லையென சந்தேகப்படத் தேவையில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

So colourful & delicious.... வாவ்!! என்ன ஒரு கலர் காம்பினேஷன்.. சூப்பர்... இந்த பேர முதல் முறையா கேள்விப்படறேன். இது எந்த ஊர் ஸ்பெஷல்..??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அழகாக இருக்கிறது. அதற்காகவே முயற்சித்துப் பார்க்க நினைக்கிறேன். கவனமாகச் செய்ய வேண்டும் என்று புரிகிறது. //கலவடை// வார்த்தை புதிது எனக்கு. ஆனால் என்னவென்று புரிகிறது.
கிட்டத்தட்ட இது போல கொரியன் உணவு ஒன்று சாப்பிட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

‍- இமா க்றிஸ்

ஆனால் எனக்குப் புரியவில்லையே. விளக்கம் please.
ரொம்ப அழகாக இருக்கிறது. சுவையாகவும் இருக்கும்.
எங்கள் ஊரில் கூவை என்றால் ஒரு வகை கிழங்கு.
அதை நினைத்தே வந்தேன்.

அன்புடன்
ஜெயா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி ஷபி,முஸ்லிம் இல்லங்களில் செய்வார்கள்.இதன் பூர்வீகம் தாய்லாந்து என்று நினைக்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இமா மேடம் உங்க பாரட்டிர்க்கு நன்றி,அழகு மட்டும் இல்லை ருசியாகவும் இருக்கும்,செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அழகு மட்டும் இல்லை ருசியாகவும் இருக்கும்,நீங்கள் சொல்வது போல் கூவை என்றால் ஒரு வகை கிழங்கு என்று நான் கேள்விபட்டது கிடையாது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஃப்ரான்ஸ் கொடிகலரில் கூவை செய்துடீங்களா,நல்லா இருக்கு,என் குறிப்பிலும் கூவை இருக்கு,ஆனால் நான் வேறுவிதமாக செய்வேன்,அடுத்தமுறை இப்படி செய்துபார்கிறேன்.முசி உங்க ஃபோன் நம்பர் கிடைக்குமா?
இது என்னுடைய கூவை குறிப்பு
http://www.arusuvai.com/tamil/node/17073

Eat healthy

france flag கலரில் கூவே.இது மலேசியாவில் famous kuih.நோன்பு சமயங்களில் கடைகளில் கிடைக்கும்.என் கணவருக்கு பிடிக்கும்.நான் செய்துபார்கிறேன் முசி.

ஹலோ முசி சிஸ்டர், அஸ்ஸலாமு அலைக்கும்.. நானும் முஸ்லிம் தான். எங்க வீட்ல இதை செஞ்சி நான் பார்த்ததே இல்ல. நாங்க திருவாரூர் மாவட்டம். நீங்க??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அக்கா... கலர்ஃபுல் கூவை.... சூப்பர்....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தெறியும் ரஸியா,உங்க குறிப்பும் பார்த்து இருக்கேன்,இது டின் தேங்காய்பாலில் செய்ய வசதியான குறிப்பு.nachial15@gmail.com என்று எனக்கு மைல் பன்னுங்க நான் தருகிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இந்தியா கொடி கலரிலும் செய்ய்வேன்,நெரம் கிடைக்கும் போது அவசியம் செய்து பாரு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அலைக்கும் சலாம்,நான் பாண்டி ஸ்டேட்,காரை பக்கம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி உமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி கூவை வித்தியாசமான பேருல ஒரு அழகான கலர்புல்லான குறிப்பு. செய்து பார்க்குறேன். பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

மலேஷிய உணவாக தெரியும். :) கவிசிவா சொல்லுவாங்க இதன் செய்முறை. சிம்பிள் கலர் காம்பினேஷன்... அழகு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்க,இங்கேயிருந்து உங்க மெயில் ஐ டி ய எடுத்துடுங்க,நானும் டின் தேங்காய்பாலில்தான் செய்வேன்பா.

Eat healthy

கூவை ரொம்ப சூப்பரா செய்து இருக்கீங்க செய்வதுதான் கஷ்டம் போல உங்க வீட்டுக்கு வந்துதான் சாப்பிடனும்

மிக்க நன்றி.செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கஷ்டமேல்லாம் கிடையாது,செய்வதர்க்கு தான் ரொம்ப நேரம் பிடிக்கும்.அவசியம் வாங்க விருந்தே சாப்பிடலாம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா நலமா? கூவை ரொம்ப அருமையாக இருக்கு. பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது .... படங்களும் அழகு

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அலைக்கும் சலாம் ஹலிலா,நல்லா இருக்கேன்,நீங்க எப்படி?ஆலையே கானும்?சீக்கிரம் குறிப்பு அனுப்புங்க.நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.