ஃபிஷ் இன் லெமன் சாஸ்

தேதி: September 10, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

சால்மன் (அ) வஞ்சிரம் மீன் - 200 கிராம்
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
சாஸ் செய்ய:
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
சர்க்கரை (சீனி) - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை தோல் துருவல் (Lemon Zest) - கால் தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3 (மிகப் பொடியாக நறுக்கியது)
புதினா - 10 இலைகள் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

மீனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
சாஸ் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
ஃப்ரையிங் பேனில் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் மீன் துண்டுகளைப் பொரிக்கவும். (மீன் துண்டுகள் வெந்தால் போதுமானது. முறுகலாகி விடக்கூடாது).
அடுப்பை அணைத்து விட்டு மீன் துண்டுகளின் மீது கலந்து வைத்துள்ள சாஸை பரவலாக ஊற்றவும்.
சுவையான ஃபிஷ் இன் மின்ட் லெமன் சாஸ் தயார்.

சாதத்துடன் வேக வைத்த காய்கறிகள் மற்றும் இந்த ஃபிஷ் இன் மின்ட் லெமன் சாஸ் சேர்த்து சாப்பிடலாம். வெஸ்டர்ன் உணவை விரும்புபவர்களுக்கு இதுவும் மிகவும் பிடிக்கும். சால்மன் மீனில் செய்தால் அதிகச் சுவையாக இருக்கும். காரம் இல்லாததால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அக்கா நல்லாருக்கு... சிம்பிள் & சூப்பர்....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பரு.... அந்த மீனை நினைச்சாலே... சப்புகொட்ட வைக்குது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super parkavea romba super ah irukku i lke fish mm.........

விருப்பபட்டியலில் சேர்துட்டேன்,மீன் வாங்கி செய்து பார்கிறேன்,நல்ல குறிப்பு

Eat healthy

வித்தியாசமான குறிப்பு நல்லா இருக்கு

பார்தாலே சாப்பிட தோணுது. யம்மி டிஷ்.

தாமதமான பதிவுக்கு மன்னிச்சு மன்னிச்சூ.... நன்றி டீம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி உமா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மீனை நினைச்சுட்டே இருக்காமல் போய் வாங்கி செய்து சாப்பிடுங்க :). நன்றி வனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி அமுதா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரசியா! சால்மனில் செய்து பாருங்க டேஸ்டியா இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி நஸ்ரின்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஜோஷிகா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Akka,Every pictures r Beautiful.9ce plating!! Good keep it up.