கருப்பை இறக்கம்

தோழிகளே, வணக்கம்.
தினமும் கயிறு தாண்டுவதால்(skipping) கருப்பை இறக்கம் அடையுமா? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

//கருப்பை இடமாற்றம்// கருப்பை இறக்கத்தைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லை, உடல்நிலை சாதாரணமாக இருப்பவர்களுக்கு எதுவும் ஆகாது.

கற்பமாக இருக்கும் சமயம் & பிரசவத்திற்குப் பின் வரும் கொஞ்ச காலம் நிச்சயம் முயற்சிக்க மாட்டீர்கள்.

கருப்பை தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் இங்கு விசாரிப்பதை விட, உங்கள் மருத்துவரோடு கலந்தாலோசிப்பதே நல்லது.

‍- இமா க்றிஸ்

நான் இந்த தலைப்பை வெளியே பார்க்கும் போதெல்லாம் இப்படிலாம் நடக்குமா என்னன்னு யோசனையில் போயிடுவேன்... :( இப்ப இமா சொன்ன பிறகு தான் இறக்கத்தை கேட்கறீங்களோன்னு டவுட்டு வந்திருக்கு.

பொதுவா கருப்பை இறக்கம் ஏற்படுத்துவது - கர்ப்ப காலத்தில் எடை அதிகம் உள்ளவற்றை தூக்குவது, பொஷிஷன் சரி இல்லாம உட்கார்ந்து வேலை செய்வது (முக்கியமா வெயிட்டான பொருட்கள் நகர்த்துவது, தரையில் துணி துவப்பது போன்றவை... அதாவது அடி வயிற்றில் அழுத்தம் தர கூடியவை), ஒரு சிசேரியனுக்கு பின் நார்மல் டெலிவெரி, மாதவிடாய் காலத்தில் அல்லது கர்ப்ப காலத்தில் ஸ்கிப்பிங், சில நேரம் சிசேரியன் செய்தவர்கள் ஸ்கிப்பிங் செய்வது, பிரசவத்துக்கு பின் போதிய கால ஓய்வு இன்றி எடை தூக்குதல் மற்றும் ஸ்கிப்பிங் போன்றவை, இவை மட்டும் அல்லாது சிலருக்கு இயற்கையாகவே மிகவும் வீக்கான கர்ப்பப்பை இருக்கலாம்... நிறைய பிள்ளை பேரும் கூட இதுக்கு காரணம் சொல்வாங்க... சில நேரம் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியா பிள்ளைகள் பெருவது. இப்படி கர்ப்பப்பை இறங்க காரணங்கள் பல இருக்கு. இதுல ஸ்கிப்பிங்கும் ஒன்று. ஆனால் எப்போதும் அல்ல... இமா சொன்னது போல கருப்பை வீக்கா இருக்கும் நேரங்களில் ஸ்கிப்பிங் செய்வது தான் தப்பு.

நீங்க ஏதும் பிரெசனையோட கேட்டிருந்தா இமா சொன்னது போல முதல்ல டாக்டரை பார்த்துடுங்க... இல்ல ஸ்கிப்பிங் பண்ணா இது போல பிரெச்சனைகள் வருமான்னு வெறும் சந்தேகம்னா ஓக்கே :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

dear friends
doctor ennakku tube test edduka soli erukkanga. antha test eppadi eduppanga.evlo neram agum .valikkumame payama erruku ethai pattri therinthal konjam villakungal please .

நன்றி imma,vanitha தவறான தலைப்பிற்கு மன்னிக்கவும்.எனக்கு சிசேரியன் நடந்து 2 வருடம் ஆகிறது.நான் ஒரு வெப்சைட்டில் உடல் எடை குறைய skipping செய்யலாம் என்றும், ஒரு சில நேரங்களில் அது கருப்பை இறக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் படித்தேன். ஆனால் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. அதனால்தான் மன்றத்தில் பதிவிட்டேன். தங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி......

தலைப்பு மாறி இருப்பதை உள்ளே வருமுன்பே கவனித்தேன். :-)
முதலில் ஸ்கிப்பிங் என்பதையும் குறிப்பிட்டிருக்கவில்லையோ! ஆரம்பத்தில் கயிறு தாண்டுவது என்பதை உயரம் தாண்டுவதாகத்தான் எடுத்துக் கொண்டேன். நாங்கள் கயிறு அடித்தல் என்போம். :) அதால்தான் பதில் சொல்லவில்லை.

//ஒரு சில நேரங்களில் அது கருப்பை இறக்கத்தை ஏற்படுத்தலாம்// ஆமாம், உண்மைதான். தாய்மையின் பின்பு உடலுறுப்புகள் முன்பு போல இராது. ஆனாலும், எல்லோருக்கும் இப்படி ஆவதில்லை.
உடல் எடை குறைய வேறு முறைகளைப் பயன்படுத்தலாமே. உணவுமுறை, நடைப்பயிற்சி... இவை பாதுகாப்பானவை. ஆளாளுக்கேற்றாற் போல கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

‍- இமா க்றிஸ்

என் அம்மாவுக்கு 65 வயது. கருப்பை இறங்கி உள்ளது. நடக்கும் போது தொடைகளில் உராயும் அளவிற்கு இறங்கி உள்ளதாக கூறுகிறார். தீர்வு என்ன? Blood Pressure உள்ளது. டாக்டரிடம் சென்றால் operation செய்ய சொல்வார் என மிகவும் பயப்படுகிறார். மருந்துகளில் குணப்படுத்த முடியுமா ? கவலையாக உள்ளது...

//தீர்வு என்ன?// எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஒரு மருத்துவர் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம். அவர்தான் தீர்வு சொல்லலாம். //Blood Pressure// அதற்கு மாத்திரை கொடுப்பார்கள். உணவுக் கட்டுப்பாடு, அப்பியாசங்களை கொஞ்சம் அதிகமாகக் கவனியுங்கள்.

//டாக்டரிடம் சென்றால் operation செய்ய சொல்வார் என மிகவும் பயப்படுகிறார்.// பரிசோதித்து விட்டு வேறு சிகிச்சை முறைகளைப் பரிந்துரைக்கலாம். மாத்திரைகள் தரலாம். உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கக் கூடும். எடை குறைக்கச் சொல்லக் கூடும்.

//மருந்துகளில் குணப்படுத்த முடியுமா ? //இத்தனை தூரம் வந்ததை அப்படியே நிறுத்தி வைக்க முடிந்தால் கூட அவருக்குச் சிரமமேதான் இல்லையா? ஹோர்மோன் மருந்துகள் தசைகளை இறுக வைக்கலாம். இந்த வயதிற்கு அது 100% வேலை செய்யும் என முடியாது. மருந்துகள் சற்று மெதுவாக வேலை செய்யும், ஓரளவுக்கு மேல் தசைகள் இறுகப் போவது இல்லை. அப்படியே ஆனாலும் இறங்கிய பகுதியை மீள உள்ளே வைத்தாக வேண்டும். இது சாத்தியமில்லை என்று தோன்றினால் யூட்ரஸ் நீக்க நேரலாம். இனி குழந்தைப் பேறு இல்லை. அந்தப் பாகம் இருப்பதால் சிரமப்படுவதா? நீக்கிவிட்டு நிம்மதியாக இருப்பதா? எது நல்லது?

//டாக்டரிடம் சென்றால் operation செய்ய சொல்வார்// சொல்ல மாட்டார் என்று நினைத்துக் கொண்டு கூட்டிப் போங்க. எத்தனை நாட்களுக்கு நடக்க முடியாமல் நடப்பார்? அப்படியே விட்டு வைக்க தேய்மானத்தால் தொற்று வரலாம். வீக்கம் வரலாம். நடக்கப் பஞ்சிப் பட்டு அசைவைக் குறைக்க எடை தானாகக் கூடும். எல்லா வகையிலும் சிரமங்கள் அதிகம். எது நல்லது! பிரச்சினை சிறிதாக இருக்கும் போது திருத்திக் கொள்வதா அல்லது நன்கு பெருக்க விட்டு பெரிதாகச் சிரமப்பட்டபின் பெரிய சிகிச்சைகட்குப் போவதா? அம்மாவின் பயத்தை விடுங்க. அவங்க முடியாமலிருந்தால் பார்ப்பது நீங்கள் தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு 30 வயது இருக்குமா? 20! உங்கள் வாழ்க்கையையும் இது கொஞ்சமாவது பாதிக்கத் தானே போகிறது? உங்கள் குழந்தைக்கு உடம்பு முடியாமலிருக்கும் போது மாத்திரைக்கு ஊசிக்குப் பயப்படுகிறார் என்று பேசாமல் இருந்து அவர் கஷ்டப்பட விட்டு வைப்பீர்களா? மாட்டீர்கள் இல்லையா? கொஞ்சம் தைரியம் சொல்லி அழைத்துப் போங்க.

//கவலையாக உள்ளது...//அப்போ கட்டாயம் கூட்டிப் போவீங்க.

‍- இமா க்றிஸ்

இந்த வயதில் operation செய்தால் உயிருக்கு ஏதும் ஆகிவிடும் என எண்ணி பயம் கொள்கிறார். அம்மாவிற்கு தைரியம் சொல்லி மருத்துவரிடம்அழைத்து செல்ல முயற்சிக்கிறேன்.
/ வயது / எனக்கு 25 வயது. என் மகனுக்கு 1 வயது 6 மாதம்... என் அம்மாவிற்கு 40 வயதில் நான் பிறந்தேன்.
நான் பிறக்கும் முன்பே கருப்பை பிரச்சனை இருந்ததாக கூறினார். நான் பிறந்த பின் மாதவிடாய் நின்று விட்டது. பிரச்சனை ஏதும் இல்லாமல் இருந்தது. இப்போது தான் இப்படி உள்ளது.
நான் விரைவில் மருத்துவரிடம் அழைத்து செல்கிறேன்...
மிக்க நன்றி இமா மேடம்.

//இந்த வயதில் operation செய்தால் உயிருக்கு ஏதும் ஆகிவிடும்// செய்யாவிட்டால் மட்டும் ஒன்றும் ஆகாதா! சிந்தித்துப் பார்க்கச் சொல்லுங்கள். யாரும் சிரஞ்சீவியாக வாழ்வது இல்லை. எல்லோருக்கும் ஒரு முடிவு இருக்கத் தான் போகிறது.

உங்கள் அம்மா இடத்தில் நான் இருந்தால்... என் பிள்ளைகள், மருமக்களுக்கு என்னால் சிரமம், கவலை இருக்கக் கூடாது என நினைப்பேன். அதற்காக சிகிச்சைக்குப் போவேன்.

தொந்தரவுகளைப் பொறுத்துப் பொறுத்து வாழ்வதன் பெயர் வாழ்க்கை அல்ல. உடல் ஆரோக்கியத்தோடு தானும் சந்தோஷமாக இருந்து குடும்பத்தின் மீதி அக்கத்தவர்களுக்கும் சந்தோஷம் கொடுத்து (குறைந்தது கவலை கொடுக்காமலாவது) வாழ்வது தான் வாழ்க்கை.

//25 வயது. என் மகனுக்கு 1 வயது 6 மாதம்.// ம். இன்னொரு குழந்தை கிடைக்கும் வயது உங்களுக்கு. எத்தனை பேரைப் பார்ப்பீர்கள் ஒரு நேரம்! அம்மா + குழந்தை + கணவர் + வீடு!! ஒரு வேளை விரைவில் மீண்டும் கர்ப்பமானால் இன்னும் சுமை அதிகமாகும். நீங்கள் பிரசவத்திற்கு மருத்துவமனைக்குப் போனால், உங்கள் அம்மாவினால் உங்கள் முதல் குழந்தையை வைத்துப் பார்க்க இயலாமலிருக்கும். உங்களுக்கும் ஸ்ட்ரெஸ்; அம்மாவுக்கும் ஸ்ட்ரெஸ். இராதா!! இதை அம்மாவைப் படிக்க வையுங்கள். சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.

//பிறக்கும் முன்பே கருப்பை பிரச்சனை// இத்தனை காலம் விட்டதே அதிகம் கண்ணா. யோசித்துப் பாருங்கள். 26 அல்லது 27 வருடங்களாக அவஸ்தையோடு சீவித்திருக்கிறார். இனியாவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கட்டும். இன்னும் வயது கடக்கும் முன் சிகிச்சைக்குப் போவது நல்லது. உண்மையில்... 65 ஒரு வயதே அல்ல. (இமா இன்னும் 8 வருடம் கழித்தும் இப்போ இருப்பது போல் தான் இருப்பேன். :-) இன்று இருப்பதை விட இன்னும் இளமையாக இருப்பேன் என்று நினைக்கிறேன்.) ;-)

//நான் விரைவில் மருத்துவரிடம் அழைத்து செல்கிறேன்./ கட்டாயம் கூட்டிப் போங்க. அதுதான் உங்கள் மொத்தக் குடும்பத்திற்கும் நல்லது. எதுவும் ஆகாது என்று சொல்லுங்க. இமா ப்ரே பண்ணுவேன். பயமில்லாமல் போகச் சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி மா.. நீங்கள் இவ்வளவு அக்கறையுடன் பதில் தந்ததை கண்டு கண்ணில் நீர் பொங்கி விட்டது. அம்மாவிடம் அப்படியே எடுத்து சொன்னேன். அனைவர் மீதும் இவ்வளவு பொறுப்பான மனிதரா என நெகிழ்ந்து போனார்.
15 நாட்களில் மருத்துவரை சந்திக்கலாம் என கூறியுள்ளார். மிக்க மகிழ்ச்சி ...
\ இமா_ இளமை \ உங்களின் வார்த்தைகளை பார்த்தாலே தெரியும் நீங்கள் என்றும் இளமை என்று ...

மேலும் சில பதிவுகள்