தம்ரொட் அல்வா

தம்ரொட் அல்வா என்பது பூசணியில் செய்யும் அல்வா தானே?
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?

தம்ருட் அல்வா என்பது பூசணியில் செய்வது கிடையாது. ரவாவுடன் மற்ற பொருட்கள் சேர்த்து செய்வது. ஆனால் அதன் செய்முறை இதுவரை தெரியாது! பூசணி சேராதது என்பது மட்டும் உறுதியாக தெரியும்.

உடன் தெரிவித்தமைக்கு நன்றி அஸ்மா
அறுசுவை இணைய தளம் மிகவும் எனக்கு உதவியாக
இருப்பதை நினைத்து சந்தோசமாக இருக்கிரது

sajuna

திருமதி. பைரோஜா ஜமால் அவர்கள் கொடுத்துள்ள தம்ரொட் அல்வா செய்முறைக் குறிப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.

தேவையானவை
ரவா - 100 கிராம்
சீனி - அரைக் கிலோ
கரூர் நெய் - கால் கிலோ
பால் - ஒரு லிட்டர்
கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 50 கிராம்

கடலைப் பருப்பை மூழ்கும் அளவு நீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து, பிறகு அம்மியில் வைத்து மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு லிட்டர் பாலில் கால் லிட்டர் எடுத்து அதில் பாதியில் அரைத்த கடலைப்பருப்பை கரைத்துக் கொள்ளவும். மீதி பாதியில் ரவாவை கரைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள முக்கால் லிட்டர் பாலை அடிக்கனமான வாணலியில் ஊற்றி காய்ச்சவும். பால் சுண்ட ஆரம்பிக்கும்போது பாலில் கரைத்து வைத்துள்ள ரவா கரைசலை ஊற்றவும். தொடர்ந்து கைவிடாது கிளறிய வண்ணம் இருக்கவும்.
இப்போது பால் கஞ்சி போல் காணப்படும். அச்சமயம் பாலில் கரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மாவினை ஊற்றவும். விடாது கிளறவும்.
கொஞ்சம் கெட்டியானவுடன் சீனியை சேர்த்துக் கிளறவும். அத்துடன் கேசரிப் பவுடரையும் சேர்க்கவும்.
சீனி நன்கு கரைந்து சேர்ந்தவுடன், சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறவும். நன்கு அல்வா திரண்டு வரும் வரை கிளறவேண்டும்.
இறுதியாக முந்திரியை நறுக்கிப் போட்டு கிளறிவிட்டு இறக்கவும்.

முட்டையை அவித்து அதன் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து, கடலைமாவை அரைக்கும் போது அதனுடன் சேர்த்து அரைத்தும் தம்ரொட் செய்யலாம். முட்டை சேர்த்தால் நிறைய நாட்களுக்கு வைத்திருக்க முடியாது.

பாபு அவர்களுக்கு மிகவும் நன்றி.தம்ரொட் அல்வா செய்முறை பார்ததும் மிகவும் சந்தோசம்.என் கனவருக்கு மிகவும் பிடித்த அல்வா.இந்தியா இருந்து வரும் போது தம்ரொட் அல்வா எடுத்து கொன்டு வந்து 3 மாதமாக வைத்து சப்பிட்டார்.இந்த செய்முறை இப்போ தெரிந்தது மிகவும் மகிழ்ச்சி.செய்து பார்க்கிரேன். நன்றி.

sajuna

டியர் பைரோஜா ஜமால்..நலமா ?நிங்கள் கொடுத்துள்ள செய்முறைக்குறிப்பை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.... ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மேலும் சில பதிவுகள்