வெண்டைக்காய் சாம்பார்

தேதி: September 17, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

வெண்டைக்காய் - 250 கிராம்
மசூர் பருப்பு - முக்கால் கப்
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - அரை கப்
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
மல்லித் தழை, கறிவேப்பிலை
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

மசூர் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு, அதனுடன் புளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி நிறம் மாறாமல் பொரித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பாதி மல்லித் தழை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பருப்புக் கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.
கொதித்ததும் பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மீதியுள்ள மல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார். சூடான சாதத்துடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

வெண்டைக்காயை பொரிக்க விரும்பாதவர்கள் வெறும் கடாயில் வதக்கிக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கமகம சாம்பார்,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி அக்கா....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

super sampar.

Tnk u sis....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பார்க்கவே சூப்பரா இருக்கு,அப்படியே சுடசுட சாதம் போட்டு சாம்பாரையும் அதுல ஊத்தி ஒரு ப்ளேட் குடுங்க உமா

Eat healthy

உங்களுக்கு இல்லாததா ரஸியா..... போட்டு வச்சிருக்கேன் சூடா சாப்டுருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

hai assalamu alaikkum nan puthithu

no probs v r friends pa

thanks