அயாம் பெஞ்ஞெத்

தேதி: September 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

கோழி - கால் கிலோ
ஃப்ரெஷ் மஞ்சள் - ஒரு அங்குலத் துண்டு
தனியா விதை - 2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
லெங்குவாஸ் (ஃப்ரெஷ் சித்தரத்தை) - 2 அங்குலத் துண்டு
எலுமிச்சை இலை - 2
சலாம் இலை - ஒன்று (கிடைக்கவில்லையெனில் தவிர்க்கலாம்)
எண்ணெய் - பொரிப்பதற்கு
சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சம்பால் செய்ய:
பழுத்த மிளகாய் - 10
பச்சை மிளகாய் - 5
பூண்டு - ஒரு பல்
தக்காளி - ஒன்று
சர்க்கரை (சீனி) - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பூண்டு, மஞ்சள் மற்றும் தனியா விதையை அரைத்துக் கொள்ளவும். (மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை).
அரைத்த கலவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, லெங்குவாஸ், இஞ்சி, எலுமிச்சை இலை, சலாம் இலை, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் கோழித் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். (லெங்குவாஸ், இஞ்சி ஆகியவற்றை லேசாக இடித்தும், எலுமிச்சை, சலாம் இலைகளை கையால் கசக்கியும் சேர்க்கவும்).
வெந்த கோழித் துண்டுகளை தனியாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்.
சம்பால் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.
கோழி பொரித்த எண்ணெயில் அரைத்த மிளகாய் கலவையைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். (ஒரு மேசைக்கரண்டி எண்ணெயே போதுமானது).
பொரித்தெடுத்த கோழித்துண்டுகள் மீது சம்பாலை வைத்து வெள்ளரித் துண்டுகள் மற்றும் சாதத்துடன் பரிமாறவும். கோழி வேகவைத்த தண்ணீரை வடிகட்டி சூப்பாக பருகலாம்.

அயாம் பெஞ்ஞெத் (Ayam Penyet) இந்தோனேஷியாவில் மிகவும் பிரபலமான உணவு வகை. சம்பாலின் காரம் தான் இதற்குச் சுவையே. மிக்ஸியில் அரைப்பதைவிட, கல்லில் அரைப்பதே அதிக ருசியுடன் இருக்கும். சம்பால் செய்யும் போது சிறிதளவு பெலாச்சான் எனப்படும் ஷ்ரிம்ப் பேஸ்ட் சேர்ப்பார்கள்.

நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் டாவுன் கெமாங்கி (Daun Kemangi) என்னும் ஒரு வகை துளசி இலைகளையும் இதனுடன் சேர்த்து பரிமாறுவார்கள். உடல் துர்நாற்றத்தை அகற்றும் தன்மை அதற்கு உண்டு எனச் சொல்வார்கள். நம் ஊரிலும் கிடைக்கும். சரியான பெயர் தெரியவில்லை. Lemon Basil என கூகுளில் தேடினால் இதன் படங்கள் கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சலாம் இலை என்பது என்ன?

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்டு ஊக்குவிக்கும் அன்பு டீமுக்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமாம்மா சலாம் இலைஎன்பது indonesian bay leaf. Daun salam அப்படீன்னு கூகுளில் தேடிப்பாருங்க. இதன் படங்கள் கிடைக்கும்.

தனியே இந்த இலையை நுகர்ந்தால் பிரத்யேக வாசனை ஒன்றும் இல்லை. கோழி சேர்த்து செய்யும் பெரும்பாலான உணவுகளில் இந்த இலையை பயன்படுத்துகிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பார்த்தேன். நன்றி கவீஸ்.

‍- இமா க்றிஸ்

good dish and diffrent

கவி புதுமையான குறிப்புகளா போட்டு அசத்துறீங்க போல ம்ம் சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அக்கா சூப்பர். புதுசு புதுசா போட்டு அசத்துறீங்க..... keep it up. இதெல்லாம் செய்து பார்க்க ஆசையாதான் இருக்கு ஆனா இதுல இருக்க ingredients இங்க கிடைக்கிறது கஷ்டம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Wow this realy super

Hi friends this is saroraaj can u join ur team

நல்வரவு...

என் பேரு இது தான்னு சொல்ற மாதிரி “அயாம் அயாம்”னு நிறைய பேர் சமீபத்துல வந்திருக்காங்க போல இருக்கே கவிசிவா... ;) எல்லாருமே அருமை. வேலை காரணமா எல்லாம் பார்த்து பதிவு போடாம மிஸ் ஆயிருச்சு. இனி பார்த்துடுறேன், நேரம் கிடைக்கும் போது செய்துடுறேன். சிக்கன், மீன் எல்லாம் செய்யாம விடுவோமா நாம? 2 வாரம் முன்பு உங்க மீன் குழம்பு தான் ஒன்னு செய்தேன். அதை கூட படம் எடுத்து போடவோ, செய்தேன் சூப்பரா இருந்துதுன்னு பதிவு போடவோ நேரம் இல்லாம போச்சு. ஆனா சுவை அருமையோ அருமை. அடுத்த முறை செய்தா கண்டிப்பா படம் போடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Bay leaf/briyani illai nu solluvom...We use dried leaf/Indonesians use the fresh one. in their cooking.

Portia Manohar

தவறாக நினைக்க வேண்டாம் AYAM PENYETஎன்பது பொறித்த கோழியின் தொடையுடன் சேர்ந்த கால் பகுதி அல்லவா?

அருமையான டிஷ் பசியை துன்டுதுங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே